Here are all the scenarios of teams from Group 1 making it to the semifinals of T20 World Cup 2022 Tamil News
T20 World Cup 2022 - Group 1 scenarios semi final in tamil: ஆஸ்திரேலிய மண்ணில் நடந்து வரும் 8வது டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்தியா ஏறக்குறைய முன்னேறிவிட்டது. இந்த அரையிறுதியில் குரூப் 1ல் உள்ள முதல் இரண்டு அணிகள் குரூப் 2ல் உள்ள முதல் இரண்டு அணிகளுடன் மோதவுள்ள நிலையில், இந்திய அணிக்கு சாதகமாக விஷயங்கள் நடந்தால், அரையிறுதியில் அவர்கள் யாரை எதிர்கொள்வார்கள் என்பதை பார்ப்பதில் சுவாரஸ்யமாக இருக்கும்.
Advertisment
சூப்பர் 12 சுற்றை இந்தியா முதல் இரண்டு இடங்களுக்குள் முடிக்க முடிந்தால், அரையிறுதியில் யாரை எதிர்கொள்ள முடியும்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சூப்பர் 12 கட்டத்தில் எத்தனை அணிகள் உள்ளன?
சூப்பர் 12 கட்டத்தில் தலா ஆறு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் உள்ளன.
இந்த அணிகள் எப்படி அரையிறுதிக்கு தகுதி பெறும்?
குழுவில் உள்ள மற்ற அனைத்து அணிகளுடன் ஐந்து போட்டிகளில் விளையாடி அந்தந்த குழுக்களில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு முன்னேறும்.
தற்போதைய புள்ளிகள் அட்டவணை எப்படி உள்ளது?
அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புள்ள அணிகள்?
நியூசிலாந்து:
நடப்பு உலகக் கோப்பையில் விளையாடிய 5 போட்டிகளில் 7 புள்ளிகளுடன், நியூசிலாந்து குழு 1ல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும், +2.113 என்ற நெட் ரன்ரெட்டுடனுன் டாப்பில் உள்ள அந்த அணி அரையிறுதிக்கு முதலாவது அணியாக முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து:
இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடனும், +0.547 என்ற நெட் ரன் ரெட்டுடனும் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அவர்களின் அடுத்த போட்டி இலங்கையுடன் உள்ளது. இது அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். எவ்வாறாயினும், இங்கிலாந்து அணி இலங்கையை தோற்கடித்தால், ஆஸ்திரேலியாவை விட சிறந்த நெட் ரன் ரெட்டைக் கொண்டிருப்பதால், அவர்கள் முதல் இரண்டு இடங்களுக்குள் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை, நடப்பு உலகக் கோப்பையில் இருந்து அதிரகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது.
இலங்கை – இங்கிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் சிட்னியில் உள்ள மைதானத்தில் நடக்கிறது.
நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடனும், -0.173 என்ற நெட் ரன்ரெட்டுடனும் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து தோல்வியடைந்தால் தான் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
'என்னடா இது சாம்பியனுக்கு வந்த சோதனை' என்பது போல், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் அரையிறுதி கனவு இலங்கை - இங்கிலாந்து அணிகளின் ஆட்ட முடிவைப் பொறுத்து தான் இருக்கும்.
அரையிறுதியில் இந்தியா எந்த அணியை எதிர்கொள்ளும்?
இந்தியா அணி குரூப் 2 டேபிள்-டாப்பர்களாக முடிவடைந்தால், அவர்கள் குரூப் 1ல் இரண்டாவது இடத்தில் இருக்கும் அணியை எதிர்கொள்வார்கள். இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தால், அவர்கள் குரூப் 1ல் முதலிடத்தில் இருக்கும் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.
தற்போது நியூசிலாந்து அணி குரூப் 1ல் முதலிடத்தில் உள்ள நிலையில், குரூப் 2ல் முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக, இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவே அதிக வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
T20 WC 2022: நாக் அவுட் போட்டிகளின் அட்டவணை:
அரையிறுதி 1: சிட்னி, 9 நவம்பர் (1:30 PM IST) அரையிறுதி 2: அடிலெய்டு, 10 நவம்பர் (1:30 PM IST) இறுதிப் போட்டி: மெல்போர்ன், 13 நவம்பர் (1:30 PM IST)