தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சாா்பில் டிஎன்பிஎல் 5-ஆவது சீசன் வீரா்கள் தோ்வு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
5-ஆவது டிஎன்பிஎல் சீசன் தொடருக்கு மொத்தம் 633 வீரா்கள் தங்கள் பெயா்களை பதிவு செய்திருந்தனர். ஏ, பி1, பி2, சி என 4 பிரிவுகளாக வீரா்கள் பிரிக்கப்பட்டனா். ஏ பிரிவில் சா்வதேச வீரா்கள் விஜய் சங்கா், அபிநவ்முகுந்த் உள்ளிட்டோா் இடம் பெற்றிருந்தனர். பி1 பிரிவில் 47 வீரா்களும், பி2 பிரிவில் குறைந்தபட்சம் 20 டிஎன்பிஎல் ஆட்டங்களில் ஆடிய 11 வீரா்களும், சி பிரிவில் ஏனைய வீரா்களும் சேர்க்கப்பட்டனர்.
இது மற்றொரு 'மாஸ்டர்' அவதாரம் - வைரலாகும் தோனி வீடியோ
2 அணிகளின் பெயா்கள் மாற்றம்:
வரும் ஜூன் 10 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இப்போட்டியில் 8 அணிகளும் முக்கிய வீரா்களை தக்க வைத்துள்ளனா். ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி விஜய், தினேஷ் காா்த்திக், வாஷிங்டன் சுந்தா் போன்றோா் தங்கள் அணிகளால் தக்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் அனுபவம் வாய்ந்த கௌஷிக் காந்தி, பாபா அபராஜித், சாய் கிஷோா் போன்றவர்களும் தக்க வைக்கப்பட்டனா். ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 16 வீரா்களையும், அதிகபட்சமாக 22 வீரா்களையும் தக்க வைக்கலாம்.
இந்நிலையில், சேப்பாக் வீரர் விஜய் ஷங்கரை சேலம் ஸ்பார்டன்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல், ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபினவ் முகுந்தை கைப்பற்றியுள்ளது.
அணிகள் விவரம்
சேலம் ஸ்பார்டன்ஸ்: பி பிராணேஷ், விஜய் ஷங்கர், ஜி பெரியசாமி, எம் அஷ்வின், கேஎச் கோபினாத், டேரில் எஸ் ஃபெராரியோ, லோகேஷ் ராஜ் டிடி, அக்கில் ஸ்ரீநாத், எம் சுகனேஷ், சுஷில் ராக், சிவா பிரபு, சிவா. , எம் விஜய் குமார், சுபம் மேத்தா
சேப்பாக் சூப்பர் கில்லீஸ்: ராகுல் டி, என் ஜகதீசன், ஹரிஷ் குமார் எஸ், ஆர் சதீஷ், எம் சித்தார்த், ஜகநாத் சினிவாஸ் ஆர்.எஸ்., சுஜய் எஸ், பிரஷீத் ஆகாஷ் எச், பி அருண், ராம் அரவிந்த் ஆர், ரஹ் பிராஜ். எஸ், சாந்தனா சேகர், அஜித் குமார் ஆர், விக்ரம் ஜாங்கிட்
லைகா கோவை கிங்ஸ்: ஷிஜித் சந்திரன். பி. அஷ்வின் வெங்கட்ராமன், அபிஷேக் தன்வார், கே விக்னேஷ், கங்கா ஸ்ரீதர் ராஜு, கவின் ஆர், முகிலேஷ் யு, ராஜேஷ் எம் பி, சுரேஷ் குமார்ஜ், மனிஷ் ஜி ஆர், செல்வகுமாரன் என், அதீக் உர் ரஹ்மான் எம்ஏ, சாய் சுதர்சன் பி, குவ்ஜித் சுபாஷ் ஜே, அரவிந்த் ஜி, நிஷாந்த் குமார்
சீச்செம் மதுரை பாந்தர்ஸ்: மிதுன் ஆர், ஷாஜகான் எம், கௌஷிக், சதுர்வேட் என்எஸ், ஆர் ரோஹித், அனிருத் சீதாராம் பி, ஆஷிக் ஸ்ரீனிவாஸ் ஆர், ஆதித்யா வி, கெளதம் வி, பிரவீன் குமார் பா, ஆர். சிலம்பரசன், ஹேமச்சந்திரன் பி, டி டி சந்திரசேகர், தீபன் லிங்கேஷ், நிர்மல் குமார் பிஎஸ், எஸ் கணேஷ்.
ரூபி திருச்சி வாரியர்ஸ்: சரவணா குமார் பி, நிதீஷ் எஸ் ராஜகோபால், அனிருதா எஸ், ஆண்டனி தாஸ், ரஹில் எஸ் ஷா, ஆதித்யா கணேஷ், சுமந்த் ஜெயின், ஆகாஷ் சும்ரா, பொய்யாமொழி எம், முகமது அட்னன் கான், கணேஷ் ஆர், அமித் சாத்விக், யாழ் அருண் மொழி, சந்தோஷ் ஷிவ், ஹேமந்த் குமார் ஜி, முகுந்த் கே, கார்த்திக் சண்முகம்.
ஐபிஎல் 2020 முழு அட்டவணை - ஓய்வுக்கு இங்கே வேலையில்ல!
வி.பி. காஞ்சி வீரன்ஸ்: திரிலோக் நாக், அர்ஜுன் மூர்த்தி, இந்திராஜித் பி, அத்யாசயராஜ் டேவிட், பிரதோஷ் ரஞ்சன் பால், எம் அபினவ், ஷருன் குமார் எஸ், சூர்யப் பிரகாஷ், ஜிதேந்திர குமார் சாத் சாத், ஆஸ். , ரஜினிகாந்த் வி
திண்டுக்கல் டிராகன்ஸ்: விஷால் வைத்தியா, மணி பாரதி, ஹரி நிஷாந்த் சி, யோ மகேஷ் வி, சுதேஷ் ஆர், மோகித் ஹரிஹரன் ஆர்.எஸ். எல் விக்னேஷ், எஸ் லோகேஷ்வர், எம் எஸ் சஞ்சய், ஆதித்யா அருண், அருண் எஸ், சுவாமிநாதன் எஸ், லக்ஷ்மன் வி, அஷ்வின் சி, சிவமுருகன் ஏ.ஆர்., அத்வைத் ஷர்மா, ஸ்ரீனிவாசன் ஆர்
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்: எஸ் தினேஷ், எம் மொஹமட், அஸ்வின் கிறிஸ்ட் ஏ, அபிநவ் முகுந்த், மோகன் பிரசாத் எஸ், ஃபிரான்சிஸ் ரோகின்ஸ் பி, எஸ் அரவிந்த், க G தம் தாமரை கண்ணன், கரூத், சாரா சப்தார், அஹுஜா, ரூபன்ராஜ் எம், அபினவ் விஷ்ணு
டூட்டி பேட்ரியாட்ஸ் அணியின் பெயா் சேலம் ஸ்பாா்டன்ஸ் எனவும், ஐ ட்ரீம் காரைக்குடி காளை அணியின் பெயா் ஐ ட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் எனவும் பெயா் மாற்றப்பட்டுள்ளன.
2 புதிய மைதானங்களில் போட்டி: நிகழாண்டு சேலம் கிரிக்கெட் பௌண்டேஷன், கோவை எஸ்என்ஆா் கல்லூரி மைதானங்களிலும் டிஎன்பிஎல் ஆட்டங்கள் நடைபெறும். சென்னையில் எந்த ஆட்டமும் நடைபெறாது. திண்டுக்கல் என்பிஆா் கல்லூரி மைதானம், திருநெல்வேலி இந்தியா சிமெண்ட்ஸ் சங்கா் நகா் மைதானத்திலும் ஆட்டம் நடைபெறும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.