ஒரே போட்டியில் 501 ரன்கள்…. 38 வயது… வீதியில் பிரபலம் – இன்றைய டாப் ஸ்போர்ட்ஸ் அப்டேட்ஸ்

விளையாட்டு உலகின் இன்றைய முக்கிய அப்டேட்டுகள் உங்கள் டைம்லைனில் இங்கே, 1. களத்தில் இறங்கிய பிரபலம் அமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில், கள்ள நோட்டு பயன்படுத்தியதாக ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின நபர் போலீசால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விசாரணை என்ற பெயரில் கொடுமை செய்த போலீஸ் ஒருவர், ஜார்ஜை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அமெரிக்காவை உலுக்கியது. […]

today sports news cricket news latest cricket updates rahane - விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள், ரஹானே, தோனி, கிரிக்கெட்
today sports news cricket news latest cricket updates rahane – விளையாட்டு செய்திகள், கிரிக்கெட் செய்திகள், ரஹானே, தோனி, கிரிக்கெட்

விளையாட்டு உலகின் இன்றைய முக்கிய அப்டேட்டுகள் உங்கள் டைம்லைனில் இங்கே,

1. களத்தில் இறங்கிய பிரபலம்

அமெரிக்காவின் மின்னபோலிஸ் பகுதியில், கள்ள நோட்டு பயன்படுத்தியதாக ஜார்ஜ் பிளாய்ட் என்று 46 வயது கறுப்பின நபர் போலீசால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரை விசாரணை என்ற பெயரில் கொடுமை செய்த போலீஸ் ஒருவர், ஜார்ஜை காருக்கு வெளியே தள்ளிவிட்டு கழுத்தில் காலை வைத்து அழுத்தியதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அமெரிக்காவை உலுக்கியது. நாடெங்கும் தற்போது ஆர்ப்பாட்டங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், பிரபல அமெரிக்கன் கால்பந்து வீரர் ஜமால் ஆடம்ஸ், டல்லாஸில் நடந்த பேரணியில் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

விடிவு காலம் பிறக்க வேண்டுவோம்

2. அதுக்குள்ள 32 வயசாச்சா?

இந்திய முன்னாள் டெஸ்ட் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மணின் மாற்று என்று ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்று அந்த ஸ்லாட்டை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் மும்பைகர் ரஹானேவுக்கு இன்று 32வது பிறந்தநாள்.

ESPN Cricinfo
Image Credit: ESPN Cricinfo

 

இன்னும் எத்தனை வருஷம் இவரை டீமுக்குள்ள வச்சிருக்க போறாங்களோ!!

மர்மம்… மார்க்கெட்டிங்… மகேந்திர சிங் தோனி – ஸ்டோக்ஸ் புத்தகமும், பாகிஸ்தான் சலம்பலும்

3. 501 ரன்கள்…. டீம் ஸ்கோர் அல்ல… ஒரு ஆள் ஸ்கோர்

வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர் பிரைன் லாரா, 1996ம் ஆண்டு, முதல் தர கிரிக்கெட் போட்டியில், 427 பந்துகளில் 501 ரன்கள் விளாசி நாட் அவுட்டாக திகழ்ந்தார். 26 வருடங்களுக்கு முன்பு, இதே நாளில் தான் அந்த தரமான செய்கை அரங்கேற்றப்பட்டது.


62 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் இதில் அடக்கம்.

மனுஷனா பொறந்தா, கொஞ்சமாவது மனசுல ஈரம் வேணும்யா!!

4. 7’1″க்கு பிறந்தநாள்

தென்னை மரத்துக்கு போட்டியாக வளர்ந்து நிற்கும் 7’1″ அடி கொண்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பானுக்கு 38வது பிறந்தநாள்.

என்னய்யா சொல்றீங்க? 38 வயசா என்று நீங்கள் ஷாக்காவது எங்களுக்கும் புரிகிறது. ஆனால், அதுதான் உண்மை.

5. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெட்மயர் கொடூரமாக பேட்டிங் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கும் ஐசிசி, அதற்கு என்ன கேப்ஷன் வைக்கலாம்? என்று ரசிகர்களின் கேள்வி எழுப்பியுள்ளது.

கண்ணுல வண்டு; வாழைத் தண்டு-னு வைக்கலாமா!!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Today sports news cricket news latest cricket updates rahane

Next Story
“மாஸ்டர் பிளாஸ்டர்” சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 44-வது பர்த்டே…
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express