கல்யாணமே நடக்குமான்னு தெரியல; அதுக்குள்ள வளைகாப்புக்கே டிப்ஸ் தரும் அமெரிக்கா!

உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கிப் போயிருக்கும் சூழலில், அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. அதாகப்பட்டது, (ஏப்.23) மாலை 4 மணி நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 849,092. பலியானவர்களின் எண்ணிக்கை 47,681. சிகிச்சை பலனளித்து வீடு திரும்பியவர்களின்…

By: April 23, 2020, 4:56:35 PM

உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பால் முடங்கிப் போயிருக்கும் சூழலில், அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பை எப்படி எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை.

அதாகப்பட்டது, (ஏப்.23) மாலை 4 மணி நிலவரப்படி அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் 849,092. பலியானவர்களின் எண்ணிக்கை 47,681. சிகிச்சை பலனளித்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 84,050.

இது என்ன கொடுமை! சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேரும் ஆஸி., கிரிக்கெட் ஊழியர்கள்

உலகின் மாபெரும் வல்லரசான அமெரிக்கா, இந்த கொரோனா வைரஸ் தொற்றால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு சில மாகாணங்களில் டென்னிஸ் போட்டிகளை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்படி ஒருவேளை போட்டிகள் நடத்தப்பட்டால் வீரர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை அமெரிக்க டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொருவரும் 6 அடி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டுமாம். டபுள்ஸ் போட்டிகளை தவிர்க்க வேண்டுமாம். அப்படி ஒருவேளை டபுள்ஸ் விளையாடினால், பிரபல பிரயன் சகோதரர்கள் போல, ‘chest bumps’ செயல்களில் வீரர்கள் ஈடுபடக் கூடாதென்று எச்சரித்துள்ளது. அதாவது, இரு வீரர்கள் நெஞ்சோடு நெஞ்சு மோதி தங்கள் வெற்றியை கொண்டாடும் முறையை தவிர்க்க வேண்டுமாம்.

மூட்டைப் பூச்சியை கொல்லும் நவீன மெஷின் – ஸ்டீவ் ஸ்மித்தின் நவீன டெக்னிக் (வீடியோ)

அமெரிக்க இரட்டையர்களான பாப் பிரயன். மைக் பிரயனின் ஆஸ்தான வெற்றி ஸ்டைல் இந்த chest bumps என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைந்து 16 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றிருப்பது கூடுதல் தகவல்.


கொரோனாவுல டிரவுசர் கிழியும் நேரத்துல விளையடுறதே யோசிக்க வேண்டிய விஷயம். இதுல அட்வைஸ்கள் வேற…

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Us tennis warned no bryan brothers chest bumps covid 19

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X