என்ன ஒரு ஆறு மாசம் இருக்குமா? ஆங்! கரெக்ட்! மார்ச் தொடங்கி ஆகஸ்ட் வரை ஆறு மாசம்-னு சொல்லலாம். இந்த லாக் டவுன் காலத்தில் ராணுவ வீரர்கள், போலீஸ், மருத்துவர்கள் போன்ற முன்கள பணியாளர்கள் தவிர பெரும்பாலானோர் வீட்டில் தான் இருந்து வருகின்றனர்.
அப்படி வீட்டில் இருந்து கொண்டே சாதித்த மூன்று இந்திய வீரர்கள் குறித்து இங்கே பார்க்கப் போகிறோம்.
முதலில் மூன்றாவது இடம் பிடித்த வீரரை பார்த்துவிடலாம். வேறு யாரு... நம்ம ஹர்திக் பாண்ட்யா தான்.
நடாசா ஸ்டான்கோவிக் எனும் மாடலை, கடந்த ஜனவரி.2ம் தேதி கடலில் ஒரு சிறிய படகில் வைத்து புரபோஸ் செய்து அந்த புகைப்படங்களை “Starting the year with my firework ❣️” என்று வெளியிட்டார். ஜுலை மாதம் அப்பா ஆயிட்டார். அவர் சொன்ன மாதிரி தீயா தான் வேலை செய்திருக்கிறார்.
டெஸ்ட் பக்கா; ஒன் டே ஓகே; டி20 ஆவரேஜ் – ரேங்கிங்கில் தடுமாறும் இந்தியா!
‘டிஜே வாலே பாபு’-னு ஒரு ஹிப்ஹாப் ராப் ஆல்பம் பார்த்து இருக்கீங்களா?…. அதில் பிரபலமானவர் தான் நடாசா ஸ்டான்கோவிக். செர்பியன் மாடலான இவர் 2012ல் இந்தியாவுக்கு வந்து பாலிவுட் சினிமாவில் ஐட்டம் சாங் ஆட, நடிக்கவும் வாய்ப்பு தேடி வந்தது.
அப்படியே ஜான்சன் & ஜான்சன், டியூரக்ஸ் விளம்பரங்களில் நடித்த நடாசா, பிக்பாஸ் 8வது சீசனில் கலந்து கொண்டார்.
தனது காதலி கர்ப்பம் அடைந்தது குறித்து பாண்ட்யா தனது ட்விட்டரில், “நடாசாவும் நானும் சேர்ந்து ஒரு சிறந்த பயணத்தை மேற்கொண்டுள்ளோம், அது இன்னும் சிறப்பாக இருக்கும். ஒரு புதிய உறவை மிக விரைவில் எங்கள் வாழ்க்கையில் வரவேற்க நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய கட்டத்திற்கு செல்ல நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் ஆசீர்வாதங்களையும் விருப்பங்களையும் நாடுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/08/hardik-natasha-1596685010-300x169.jpg)
இரண்டாவது இடத்தில் இருப்பது நம்ம யுவேந்திர சாஹல்
சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள சாஹல், டிக்டாக்கில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக லாக்டவுன் அமலில் இருந்த காலத்தில் முழுநேர டிக்டாக் பயனராக மாறி பலவிதமான நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் மத்தியில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
இந்நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாஹல் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
முதலிடத்தில் கேப்டன் கோலி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், அவரது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கும் முதல் குழந்தை பிறக்க இருக்கிறது. இது குறித்த தகவலை கோலி, தனது சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார். விராட் கோலி, தன் ட்விட்டர் பக்கத்தில், “இனி நாங்கள் மூன்று பேர். ஜனவரி 2021 ஆம் ஆண்டு புது வரவு” என்று கூறியுள்ளார்.
இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை கோலி அறிவித்தவுடன், பலரும் வாழ்த்து மழை பொழியத் தொடங்கிவிட்டனர்.
இந்திய கிரிக்கெட் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, கோலியின் ஜோனியாரான ஹர்திக் பாண்ட்யா கல்யாணமே செய்து கொள்ளாமல், லிவ்விங் டூ கெதர் ரிலேஷன் ஷிப்பில் இருந்து, கோலிக்கு முன்பாகவே குழந்தை பெற்றெடுத்ததை வைத்தும் சமூக தளங்களில் மீம்ஸ் தெறிக்கிறது.
மீம்ஸ்களுக்கு அப்பாற்பட்டு, வாழ்த்துக்கள் 3 இடியட்ஸ்!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil