India vs New Zealand World Cup: உலகக் கோப்பை ‘நாக் அவுட்’ போட்டிகளில் விராட் கோலி தொடர்ந்து சொதப்பி வருகிறார். இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.
2019 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றுகளில் அபாரமாக ஆடி, முதலிடத்தைப் பிடித்தது. குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி ஆகியோர் பெரும்பாலான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
விராட் கோலி
ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த அரை இறுதிப் போட்டியில் இன்று நியூசிலாந்துக்கு எதிராக 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொதப்பினர். மூவரும் தலா ஒரு ரன்னில் அவுட் ஆகி, மொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினர். வெறும் 5 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணி தத்தளித்தது.
விராட் கோலியின் ரன் குவிப்பு வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதுவரை உலகக் கோப்பையில் 6 நாக் அவுட் போட்டிகளில் விளையாடியிருக்கும் கோலி, ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை.
உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளில் முறையே 24(33 பந்துகள்), 9(21 பந்துகள்), 35(49 பந்துகள்), 3(8 பந்துகள்), 1(13 பந்துகள்), 1(6பந்துகள்) என ரன்கள் சேர்த்திருக்கிறார் கோலி. அதாவது, 6 போட்டிகளில் மொத்த ரன்கள் 73. இதன் சராசரி ரன் ரேட் 12.16. ஸ்டிரைக் ரேட் 56.15 ( 100 பந்துகளுக்கு).
India VS New Zealand 2019 Live Score: இந்தியா - நியூசிலாந்து அரை இறுதி ஆட்டம் லைவ் ஸ்கோர்
முக்கிய ஆட்டங்களில் தனது ஃபார்ம் குறித்து விராட் கோலி ஆய்வு செய்ய வேண்டும்.