Advertisment

வாட்சனை 'கும்பிடுறேன் சாமி' ஆக்கிய வாஹாப் ரியாஸ் - பர்த்டே கிஃப்ட் கொடுத்த ஐசிசி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
watson vs wahab riaz cwc 2015 video cricket news - கிரிக்கெட் செய்திகள்

watson vs wahab riaz cwc 2015 video cricket news - கிரிக்கெட் செய்திகள்

2015 உலகக் கோப்பையின் பாகிஸ்தான் vs ஆஸ்திரேலிய காலிறுதிப் போட்டியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

Advertisment

காரணம் வாட்சன் vs வாஹாப் ரியாஸ் இடையே நடந்த அனல் தெறித்த மோதல்...

publive-image

ஷமியின் வேகத்திற்கு காரணம் இதுதான்! யாருடன் ஓட்டப் பந்தயம் நடத்துகிறார் பாருங்கள்

வாட்சனுக்கு மணிக்கு 148, 149 கி.மீ வேகத்தில் பவுன்ஸ் பந்துகளை வீசி, அவரை திணறடித்துக் கொண்டிருந்தா இடது கை ஸ்பீட்ஸ்டர் வாஹாப் ரியாஸ்.

publive-image

உண்மையை சொல்ல வேண்டுமெனில், ரியாஸின் பந்தை என்ன செய்வது என்று தெரியாமல், குழந்தை போல சிரித்துக் கொண்டு, நிற்கதியாகவும் கிரீஸில் தவித்துக் கொண்டிருந்தார் ஸ்மேஷர் ஷேன் வாட்சன்.

publive-image

ரியாஸின் ஒவ்வொரு பந்தும், வாட்சனின் ஹெல்மெட்டை நோக்கியே சீறிக் கொண்டு வந்தன. அன்றைய தினம், அன்றைய நேரம், அடிலைட் பிட்சும், 'நீ நடத்து கண்ணு' என்பது போல ரியாஸுக்கு ஒத்துழைத்தன.

publive-image

28, 2020

இன்று வாஹாப் ரியாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, அந்த போட்டியில் இருவருக்கும் இடையே நிகழ்ந்த அடிதடி அதகளத்தை அப்படியே எடிட் செய்து ரியாஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது ஐசிசி.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment