வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் எவர்டன் வீக்ஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் வயது 95. கடந்த 2019ம் ஆண்டு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு, அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்த நிலையில் தற்போது இயற்கை எய்தினார்.
தொடர்ந்து புகழ்பெற்ற மூன்று டபள்யூக்களின் இறுதி வீரரான வீக்ஸ், வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். அவருக்கு விண்டீஸ் கிரிக்கெட், ஐசிசி மற்றும் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
2011 உலகக் கோப்பை ஃபைனலில் சூதாட்டமா? - குற்றவியல் விசாரணை தொடங்கிய இலங்கை
இரண்டாவது உலகப்போருக்கு பிறகான வெஸ்ட் இண்டீஸ் அணியில் எவர்டன் வீக்ஸ், கிளைட் வால்காட் மற்றும் பிராங் ஓரல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த மூன்று வீரர்களும் பெரும் நட்சத்திரங்களாக ஒளிர்ந்தனர். இதில் வால்கட் கடந்த 2006ல் மரணமடைந்தார். ஓரல் 1967ல் காலமானார். இவர்கள் மூவரும் 18 மாதங்கள் இடைவெளியில் பார்படாஸில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் புகழ்பெற்ற மூன்று டபள்யூக்களின் இறுதி வீரரான வீக்ஸ், மற்றும் மறைந்த சக வீரர்கள் கிளைட் வால்காட், பிராங் ஓரல் ஆகியோர் நினைவாக பிரிட்ஜ்டவுன் தேசிய மைதானத்திற்கு த்ரி டபள்யூ ஓவல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த 1948 முதல் 1958 வரை 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள வீக்ஸ், 4,455 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 58.62. அதிகபட்ச ரன்னாக ஒரு போட்டியில் 207 எடுத்துள்ளார். 15 சதங்களை குவித்துள்ளார்.
அதேபோல், 152 முதல் தர போட்டிகளில் 55.34 சராசரியுடன் 12,010 ரன்கள் குவித்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 304. அதுவும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்த ஸ்கோரை பதிவு செய்தார். மொத்தமாக முதல் தர கிரிக்கெட்டில் 36 சதங்கள் அடித்துள்ளார்.
1948 இல் இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஐந்து சதங்கள் அடித்து, அடுத்தடுத்து அதிக சதம் அடித்த வீரர் எனும் சாதனையை இன்றும் தன்வசம் வைத்திருக்கிறார்.
கேரி சோபருடன் இணைந்து 95 நிமிடங்களில் பார்ட்னர்ஷிப்பில் 100 ரன்களை அடித்ததும் சாதனையாக கருதப்படுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் பந்து கையில் பட்டதில் கடுமையான காயம் ஏற்பட்ட நிலையிலும் 3 மணிநேரத்தில் மீண்டும் மைதானத்திற்கு வந்து 16 பவுண்டரிகள் உள்பட 90 ரன்களை அடித்த இவரது மனஉறுதி தற்போதும் பாராட்டப்படுகிறது.
கிரிக்கெட் ஜாம்பவான்களின் ஒருவரான எவர்டன் வீக்ஸ் காலமானதைத் தொடர்ந்து, முன்னணி வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1, 2020Our hearts are heavy as we mourn the loss of an icon. A legend, our hero, Sir Everton Weekes. Our condolences go out to his family, friends and many fans around the world. May he rest in peace. ???????? pic.twitter.com/RnwoJkhjPd
— Windies Cricket (@windiescricket)
Our hearts are heavy as we mourn the loss of an icon. A legend, our hero, Sir Everton Weekes. Our condolences go out to his family, friends and many fans around the world. May he rest in peace. ???????? pic.twitter.com/RnwoJkhjPd
— Windies Cricket (@windiescricket) July 1, 2020
வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் எவர்டன் வீக்ஸ் காலமானதைப் பற்றிஅறிந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது இரங்கல். விளையாட்டின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர் என்று இந்திய வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் பதிவிட்டுள்ளார்.
1, 2020Heard about the passing away of West Indies legend , Sir Everton Weekes. He was one of the greats of the game My condolences to his family and loved ones. pic.twitter.com/eQQo3QXN7F
— VVS Laxman (@VVSLaxman281)
Heard about the passing away of West Indies legend , Sir Everton Weekes. He was one of the greats of the game My condolences to his family and loved ones. pic.twitter.com/eQQo3QXN7F
— VVS Laxman (@VVSLaxman281) July 1, 2020
1, 2020Everton Weekes, one of West Indies' greatest batsmen and a former ICC match referee, has passed away at the age of 95. May he rest in peace. pic.twitter.com/m6aP7JamPE
— ICC (@ICC)
Everton Weekes, one of West Indies' greatest batsmen and a former ICC match referee, has passed away at the age of 95. May he rest in peace. pic.twitter.com/m6aP7JamPE
— ICC (@ICC) July 1, 2020
After retirement, Weekes continued to serve the game as he served as a coach, administrator and match referee for the International Cricket Council. Weekes had coached Canada at the 1979 World Cup.
Weekes was inducted into the ICC Hall of Fame in 2009. He was awarded a knighthood in 1995. The Three Ws Oval at the University of the West Indies in Barbados is named after the famous trio.
ஓய்வு பெற்ற பின்னர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பயிற்சியாளர், நிர்வாகி மற்றும் போட்டி நடுவராக பணியாற்றி, வீக்ஸ் தொடர்ந்து விளையாட்டிற்கு சேவை செய்தார். 1979 உலகக் கோப்பையில் கனடா அணிக்கு பயிற்சியாளராக வீக்ஸ் செயல்பட்டார்.
2009 இல் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் வீக்ஸ்சேர்க்கப்பட்டார். 1995 இல் அவருக்கு நைட்ஹூட் வழங்கப்பட்டது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.