Advertisment

அதிரடி உலக சாதனை: யார் இந்த ஜெகதீசன்?

தமிழக வீரர் ஜெகதீசன் 141 பந்துகளில் 15 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளை அடித்து 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Who is N Jagadeesan TN cricketer in tamil

Vijay Hazare Trophy: N Jagadeesan New World Record List A cricket Tamil News

 Tamil Nadu cricketer Narayan Jagadeesan Tamil News: 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு - அருணாச்சல பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில், டாஸ் வென்ற அருணாச்சல பிரதேசம் பந்துவீசுவதாக தெரிவித்த நிலையில், முதலில் பேட்டிங் தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 506 ரன்கள் குவித்தது.

Advertisment

தொடர்ந்து விளையாடிய அருணாச்சல பிரதேசம் 28.4 ஓவர்களில் 71 ரன்கள் மட்டும் எடுத்து ஆல்-அவுட் ஆனாது. இதனால், தமிழ்நாடு அணி 435 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை ருசித்தது.

புதிய சாதனை படைத்த தமிழக வீரர் ஜெகதீசன்

இந்த ஆட்டத்தில் தமிழக தொடக்க வீரர் என் ஜெகதீசன் 141 பந்துகளில் 15 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகளை அடித்து 277 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.

Vijay Hazare Trophy: கோலியை முந்திய தமிழக வீரர்… தொடர்ந்து 5வது சதம் அடித்து புதிய சாதனை!

முன்னதாக, ஜெகதீசன் தனது 5வது சதத்தை பதிவு செய்ததன் மூலம், இந்த தொடரில் தொடர்ந்து ஐந்தாவது சதமடித்த முதல் வீரர் என்கிற சாதனையை படைத்தார். இதற்கு முன், இந்த தொடரில் விராட் கோலி, பிருத்வி ஷா, ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தட் படிகள் போன்ற வீரர்கள் தொடர்ந்து 4 சதங்களை விளாசியுள்ளனர். அவர்களின் சாதனையை தமிழக வீரர் ஜெகதீசன் முறியடித்தார்.

மேலும், இந்த தொடரில் தொடர்ந்து ஐந்து சதத்தை அடித்ததன் மூலம் தமிழக வீரர் ஜெகதீசன் புதிய உலக சாதனைகளையும் படைத்தார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக தனிநபர் ஸ்கோர் என்கிற சாதனையையும், 114 பந்துகளில் தனது இரட்டை சதத்தைக் கடந்து மற்றொரு வரலாற்று சாதனையும் பதிவு செய்தார் ஜெகதீசன்.

இதுவரை இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த சங்ககாரா, தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பீட்டர்சன், இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் தொடர்ச்சியாக நான்கு சதங்களை மட்டுமே அடித்திருந்தனர்.

இதையும் படியுங்க: Vijay Hazare Trophy: கோலியை முந்திய தமிழக வீரர்… தொடர்ந்து 5வது சதம் அடித்து புதிய சாதனை!

யார் இந்த ஜெகதீசன்?

publive-image

26 வயதான நாராயண் ஜெகதீசன் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் தமிழகத்தின் ரஞ்சி டிராபி அணியில் அறிமுகமானார். பிறகு, 2016-17 ஆண்டுக்கான விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாட்டிற்காக தனது லிஸ்ட் ஏ போட்டியில் அறிமுகமானார்.

publive-image

தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். எனினும், அவர் தனது அறிமுக ஆட்டத்தை 2020 ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு அணிக்கு எதிராக விளையாடினார்.

2016-17 ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேசத்திற்கு எதிராக 7-வது இடத்தில் பேட்டிங் செய்த ஜெகதீசன் முதல் இன்னிங்சில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் என்று 123 ரன்கள் எடுத்தார். அவரது அபாரமான ஆட்டத்தால், மோசமான தொடக்கம் இருந்தபோதிலும், தமிழ்நாடு அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 555 ரன்கள் என்ற மகத்தான ஸ்கோரைப் பதிவு செய்ய உதவியது. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தாலும், ஆட்ட நாயகன் விருதை ஜெகதீசன் தட்டிச் சென்றார்.

publive-image

அடுத்த ஆண்டு, ஜனவரி 2017ல், ஐதராபாத் அணிக்கு எதிரான மாநிலங்களுக்கு இடையேயான டி20 போட்டியில் ஜெகதீசன் தனது முதல் டி20 ஆட்டத்தை விளையாடினார். 166 ரன்களைத் துரத்துவதில் அவர் வெறும் 18 ரன்கள் எடுத்ததால் அது அவருக்கு சிறந்த தொடக்கமாக இருக்கவில்லை. தமிழ்நாடு அணி 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டம் தோல்வியுற்றது.

இதையும் படியுங்க: Vijay Hazare Trophy: கோலியை முந்திய தமிழக வீரர்… தொடர்ந்து 5வது சதம் அடித்து புதிய சாதனை!

ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு, 2017 ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே டிராபி அணியில் இடம் பிடித்தார். உத்தரபிரதேசத்திற்கு எதிராக தனது அறிமுக ஆட்டத்தை விளையாடினார். அவர் பெரிய ரன்கள் எடுக்காத நிலையில், அணி ஆட்டத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

publive-image

தற்போதுவரை ஜெகதீசன் 26 முதல்தர ஆட்டங்கள், 41 லிஸ்ட் ஏ போட்டிகள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடி ஒவ்வொரு ஃபார்மெட்டிலும் 1000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். முதல் தர போட்டிகளில் 1261 ரன்களும், லிஸ்ட் ஏ மற்றும் டி20 போட்டிகளில் முறையே 1782 ரன்களும், 1064 ரன்களும் எடுத்துள்ளார்.

நடப்பு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ஜெகதீசன் ஆறு போட்டிகளில் 156.00 சராசரியில் 624 ரன்கள் எடுத்து முன்னணி வீரராக உள்ளார். தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்களை பதிவு செய்து மிரட்டி வருகிறார். ஆனால், அவரை ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்த ஆண்டிற்கான அணியில் தக்கவைக்கவில்லை.

publive-image

2022 விஜய் ஹசாரே டிராபியில் ஜெகதீசனின் இன்னிங்ஸ் பட்டியல்:

எதிராக பீகார்: 5

எதிராக ஆந்திரா: 114*

சத்தீஸ்கர் எதிராக: 107

எதிராக கோவா: 168

vs ஹரியானா: 128

எதிராக அருணாச்சல பிரதேசம்: 277 .

இதையும் படியுங்க: Vijay Hazare Trophy: கோலியை முந்திய தமிழக வீரர்… தொடர்ந்து 5வது சதம் அடித்து புதிய சாதனை!

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Tamilnadu Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment