Live Score, India vs Australia, Women’s T20 Tri-series Finals : பெண்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் நடைபெற்று வரும் டி-20 முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்குள் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா இரண்டு முறை மோதிக் கொண்டன.
லீக் போட்டிகளில் சமநிலை வகித்த மூன்று அணிகள்
நடைபெற்று முடிந்த லீக் சுற்று முடிவுகளில் மூன்று அணிகளும் 2 வெற்றி, 2 தோல்வி என்று சமநிலை வகித்தது. ரன் – ரேட் அடிப்படையில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெறும் போட்டியில் ஹர்மன்பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணியும், மெக் லெனிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவும் மோத உள்ளது. இந்திய நேரப்படி இன்று காலை 08:10 மணிக்கு இந்த போட்டிகள் துவங்க உள்ளது. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா. 174 ரன்களை சேஸ் செய்த இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மாவும், மந்தனாவும் சிறப்பான துவக்கத்தை தந்தனர்.
மேலும் படிக்க : இது தான் ஜென்டில்மேன் கேம்மா? முகம் சுழிக்க வைத்த வங்கதேச வீரர்கள்!
டாஸை வென்றது ஆஸ்திரேலிய அணி
மெல்பர்னின் ஜன்ங்சன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸை வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலிய அணி. இந்திய அணியில் ஷஃபாலி, ஸ்மிரிதி, ஜெமிமா, ஹமன்ப்ரீத், தன்யா (விக்கெட் கீப்பர்), தீப்தி, ரிச்சா, சிக்கா, அருந்ததி, ராஜேஸ்வரி, ராதா ஆகியோர் விளையாட உள்ளனர்.
In the #AUSvIND tri-series final, #TeamIndia will bowl first. Debut for Richa Ghosh, who replaces Harleen Deol
Playing XI: Shafali, Smriti, Jemimah, Harmanpreet (C), Taniya (WK), Deepti, Richa, Shikha, Arundhati, Rajeshwari, Radha
Follow it live ???????? https://t.co/bG1mpJurxX pic.twitter.com/jdXq754ITY
— BCCI Women (@BCCIWomen) February 12, 2020
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸ்திரேலிய அணி
16 ஓவர்கள் முடிவுற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பெத் மூனேய் 45 பந்துகளில் 53 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார். இந்திய அணியின் தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாத், மற்றும் அருந்ததி ரெட்டி தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.

156 ரன்கள் இலக்கு
முத்தரப்பு டி20 இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது. அரைசதம் அடித்த பெத் மூனேய் 71 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் பெவிலியன் திரும்பினார். இந்திய அணியின் சார்பில் தீப்தி சர்மாவும், ராஜேஸ்வரியும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

இந்திய அணியின் ஆட்டம்
தொட்டக்க ஆட்டக்காரரான ஷஃபாலி வெர்மா டெய்லா வ்லேமின்க் பந்தில் ஆட்டம் இழந்தார். தற்போது ஸ்மிரிதி மந்தனாவும் ரிச்சா கோஷும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். 6 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. அனபெல் சுதர்லேண்ட் பந்தில் ரிச்சாகோஷ் ஆட்டமிழந்தார். 23 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டெய்லாவிடம் கேச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்து களம் இறங்கிய ஜெமிமா 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து டெய்லாவின் பந்தில் நிக்கோலாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக விளையாடி வரும் மந்தனா 23 பந்துகளில் 38 ரன்கள் எடுத்துள்ளார். அவருடன் ஜோடியாக களத்தில் உள்ளார் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர்.
ஆட்டமிழந்தார் ஸ்ம்ரிதி மந்தனா
37 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ம்ரிதி மந்தனா. மேகன் ஸ்சுட் பந்தில் நிக்கோலாவிடம் கேச் கொடுத்து ஆட்டமிழந்தார் மந்தனா. ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் தீப்தி ஷர்மா தற்போது விளையாடி வருகின்றனர்.

தொடர்ந்து விக்கெட்டுகளை பரிகொடுத்த இந்திய அணி
ஜெஸ் ஜோனஸன் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினார் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கௌர். 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட். ஜெஸ் ஜோனஸன் பந்தில் அருந்ததி 2 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். எல்லிஸ் பெர்ரியின் பந்தில் ஷிக்கா பாண்டேவும் 4 ரன்களில் அவுட்டானார். ராதா யாதவ் ஜெஸ் ஜோனஸனின் பந்தில் அவுட்டானார். தற்போது இந்தியா 127 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

7 பந்துகளில் 11 ரன்கள் (2 – ஃபோர்கள் உட்பட) எடுத்த விக்கெட் கீப்பர் தனியா பாட்டியா ஜெஸ் ஜொனஸெனின் பந்தில் அவுட்ட்டானார். தீப்தி ஷர்மாவும் ஜெஸ் ஜோனஸெனின் பந்தில் அவுட்டானார். இந்திய அணி 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முத்தரப்பு டி20 தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலியா. 5 விக்கெட்டுகளை எடுத்து அபாரமாக விளையாடியுள்ளார் ஜெஸ் ஜோனஸென்.