Advertisment

இது தான் ஜென்டில்மேன் கேம்மா? முகம் சுழிக்க வைத்த வங்கதேச வீரர்கள்!

போட்டியின் முடிவில் ஏற்பட்ட குழப்பம் துரதிர்ஷ்டவசமானது - வங்கதேச ஸ்கிப்பர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
U19 world cup final clashes between India Bangladesh players viral video, cricket news, viral videos, cricket viral videos,

U19 world cup final clashes between India Bangladesh players viral video : நேற்று (09/02/2020) இந்தியா மற்றும் வங்க தேச அணிகளுக்கு இடையேயான U19 உலகக் கோப்பைக்கான இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வங்க தேச அணி முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றி அந்நாட்டிற்கு பெருமை சேர்த்தது.  போட்டி முடிந்தவுடன் வங்கதேச அணி வீரர்கள் மைதானத்திற்கு உள்ளே சென்று ஆராவராம் கூச்சலிட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisment

U19 world cup final clashes between India Bangladesh players viral video, cricket news, viral videos, cricket viral videos,

மேலும் படிக்க : பும்ராவின் ஜெராக்ஸாக முயற்சிக்கும் நியூஸிலாந்து சிறுவன்; வைரல் வீடியோ

ஒரு எல்லை வரை மகிழ்ச்சியும் ஆரவாரமுமாக இருந்த அவர்களின் கொண்டாட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் ஆக்ரோசமாக மாறியது.  தங்களின் முகத்தினை காட்டமாக வைத்துக் கொண்டு வெறித்தனமாக கூச்சலிட்டனர். சில நிமிடங்களில் இந்திய வீரர்களுக்கும் வங்கதேச அணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளே ஏற்பட்டிருக்கும் அளவை அவர்களின் கூச்சல் எட்டியது. பின்னர் அம்பேயர் பராஸ் மாம்பிரே வங்கதேச அணி வீரர்களை சாந்தப்படுத்தினார்.

இந்த நிகழ்வு குறித்து தன்னுடைய கருத்தினை பதிவு செய்துள்ளார் வங்கதேச கிரிக்கெட் அணியின் ஸ்கிப்பர், அக்பர். அதில் “எங்களுடைய வீரர்கள் வெற்றிக் களிப்பில் உணர்ச்சிப்பூர்வமாக நடந்துகொண்டனர். போட்டியின் முடிவில் ஏற்பட்ட குழப்பம் துரதிர்ஷ்டவசமானது. இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகள்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் படிக்க : U19 கிரிக்கெட்: முதன்முறையாக உலகக் கோப்பையை வென்றது பங்ளாதேஷ்

முதலில் விளையாட துவங்கிய இந்திய அணி 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிகவும் மெதுவாக தன்னுடைய இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணிக்கு யஷாவி ஜெய்ஸ்வாலின் அரை சதம் பலம் சேர்த்தது. 178 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய வங்க தேச அணியின் ஓப்பனர்கள் எமோன் மற்றும் தன்ஸிட் ஹாசன் முதல் 9 ஓவர்களிலேயே 50 ரன்களை எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர் ரவி பின்சோயின் தரமான பந்துவீச்சால் திக்கு முக்காடியது வங்கதேச அணி. 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் அவர். இருந்தாலும் வங்கதேச ஸ்கிப்பர் அக்பர் 77 பந்துகளில் 43 ரன்கள் அடிக்க, எமோனும் 47 ரன்கள் அடிக்க வங்க தேச அணியின் வெற்றி உறுதியானது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Video Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment