உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் தொடர், வரும் மே30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து கிளம்புவதற்கு முன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதில், கோலி பேசியதில் மிக முக்கியமான அம்சங்கள் இதோ,
நான் கலந்து கொண்ட மூன்று உலகக் கோப்பைத் தொடர்களில் இது தான் மிகக் கடினமான உலகக் கோப்பைத் தொடராக இருக்கப் போகிறது.
சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதை விட முக்கியமானது, அழுத்தங்களை கையாள்வது.
முதல் போட்டியில் இருந்தே அனைவரும் உச்சக்கட்ட தீவிரத்துடன் விளையாட வேண்டும்
மன நிறைவு என்பதற்கு இங்கு வேலையே இல்லை.
உலகக் கோப்பையில் அழுத்தம் தான் மிக மிக முக்கியமான அம்சம்.
உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமெனில், வெறித்தனத்தை அப்படியே மெய்ன்டெய்ன் செய்தாக வேண்டும்.
எங்களது முதல் நான்கு போட்டி, மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது.
ஐபிஎல்-ளிலிருந்து வெளிவந்து உலகக் கோப்பையில் தனது முழு பலத்தை குல்தீப் யாதவ் வெளிக்காட்ட வேண்டிய சரியான தருணம் இது.
குல்தீப் - சாஹல் எங்களின் இரு தூண்கள்.
மேலும் படிக்க - அசுர வளர்ச்சியுடன் மிரட்டும் வங்கதேச கிரிக்கெட் அணி! உலகக் கோப்பை உங்கள் கைக்கு மிக அருகில்!
கோச் ரவி சாஸ்திரி
எங்களுக்கு மகேந்திர சிங் தோனி இருக்கிறார். விக்கெட் கீப்பிங்கானாலும் சரி, போட்டியின் கடினமான தருணங்களை மாற்றுவதாக இருந்தாலும் சரி, தோனியை விஞ்ச இங்கு எவரும் இல்லை.
இந்த உலகக் கோப்பையில் மிகப் பெரிய வீரராக தோனி விளங்கப்போகிறார்.
சுருக்கமா சொன்னாலும், நறுக்குன்னு சொல்லிட்டாப்ள!