உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டி: முட்டி மோதும் 3 அணிகள்; இந்தியா முன்னேற இதை செய்தே ஆகணும்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தூரில் நடக்கும் 3வது டெஸ்டில் வெற்றி பெற்றால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான இடம் உறுதியாகிவிடும்.
How Can Team India Qualify For ICC World Test Championship Final Ahead Of IND VS AUS 3rd Test? EXPLAINED in tamil
World Test Championship final Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
Advertisment
இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இந்த தொடர் வெற்றிகள் மூலம் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வருகிற மார்ச் 1ம் தேதி நடக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டி: முட்டி மோதும் 3 அணிகள்
இந்தப் போட்டிக்கான பயிற்சிகள் நாளை முதல் இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதற்காக ஓய்வில் இருந்த இந்திய வீரர்கள் அணியில் இணைந்துள்ளனர். அணியில் சவுராஷ்டிரா அணியை ரஞ்சிக் கோப்பை தொடரில் வெற்றிக்கு அழைத்துச் சென்ற ஜெய்தேவ் உனட்கட்-வும் இணைகிறார். ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் 5 நாள் ஆட்டத்தை மூன்றே நாளில் முடித்து அபார வெற்றியை ருசித்த இந்தியா, 3வது டெஸ்ட் போட்டியிலும் தனது ஆதிக்கத்தை தொடரவே நினைக்கும். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை அடைவதற்கு இந்தியாவுக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை என்பதால், இப்போட்டியில் தீவிரமாக செயல்படும்.
இந்தூரில் நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைவதற்கான இடம் உறுதியாகி விடும். தற்போது இந்திய அணி 64.06 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியை இலங்கையால் மட்டுமே முந்த முடியும். எனினும், வெற்றி பெற்றால் இந்தியாவுக்கான இடம் உறுதியாக கிடைக்கும். மறுபுறம், ஆஸ்திரேலியாவுக்கு ஒரு டிரா மட்டுமே தேவை.
எனவே, இந்தூரில் நடக்கும் போட்டி இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தூர் மற்றும் அகமதாபாத் இரண்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, நியூசிலாந்தை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா இறுதிப்போட்டி வாய்ப்பில் இருந்து வெளியேறும். அப்படி நடந்தால், இலங்கை 61 புள்ளிகளுடன் 2வது இடத்தைப் பிடிக்கும். 56 புள்ளிகளுடன் இருக்கும் இந்தியா வெளியேற்றப்படும்.
இந்தியா எப்படி தகுதி பெற முடியும்?
இந்தியா ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 64 சதவீத புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 67 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரை இந்தியா எப்படியும் வெல்ல வேண்டும். 3வது மற்றும் 4வது டெஸ்டில் இந்தியா டிரா செய்தலும் கூட தகுதி பெற வாய்ப்புள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், இந்தியா இரண்டில் ஒரு போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றாலும், நியூசிலாந்தை வீழ்த்தினால் இலங்கையால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்பதால் அது இன்னும் போதாது. தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஏற்கனவே நாக் அவுட் ஆகிவிட்டன.