இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆர் வைஷாலி, முன்னாள் உலக சாம்பியன் ஆன்டாவ்நேடா ஸ்டெபனோவா Women Speed Chess Championships தொடரில் வீழ்த்தி, அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த வைஷாலி, கால் இறுதிப் போட்டியில் மங்கோலியாவின் முன்குழ் டுர்முங்க்-ஐ எதிர் கொள்கிறார். கடந்த புதன் கிழமையன்று நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டிகளில், எதிரிகளை ஆட்டம் காண வைக்கும் வேலண்டினா குனினா மற்றும் அலினா கஷ்லின்ஸ்கயா ஆகிய பலம் வாய்ந்த வீராங்கனைகளை வைஷாலி தோற்கடித்து அசத்தினார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று : இங்கிலாந்து தொடர் துவங்குவதில் சிக்கல்
முன்னாள் உலக சாம்பியன் ஆன்டாவ்நேடா-வை வீழ்த்தியது குறித்து பேசிய வைஷாலி, "முன்னாள் உலக சாம்பியனுடன் விளையாடியதும், அவரை வீழ்த்தியதும் மிகச் சிறந்த தருணமாகும்.
போட்டி தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு 5.5-2.5 என்று நான் முன்னணியில் இருந்தேன். பின்னர் புல்லட் பிரிவில் இன்டர்நெட் கனக்ஷன் துண்டிக்கப்பட்டது, அதன் பிறகு அடுத்தடுத்து நான் சறுக்க, ஆட்டம் சமநிலைக்கு வந்துவிட்டது. ஆனால், இறுதியில் வென்று விட்டேன்" என்று வைஷாலி தனது பரபரப்பான போட்டி குறித்து தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த வைஷாலி, செஸ் வீரர் ஆர் பிரக்னானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட் பிரிக்ஸ் தொடர் நான்கு சுற்றுகளை கொண்டிருக்கும், மொத்தம் 21 போட்டியாளர் பங்கேற்றுள்ளனர். 21 போட்டியாளர்களில் ஒவ்வொருவரும் நான்கு கிராண்ட் பிரிக்ஸ் பிரிவுகளில் மூன்றில் பங்கேற்பார்கள்.
ஜூலை 20 ஆம் தேதி சூப்பர் பைனல் நடைபெறவிருக்கிறது.
7 அடி உயர பாகிஸ்தான் வீரரை வதந்தியால் சமாதியாக்கிய நெட்டிசன்கள்