இந்த லாக் டவுன் காலத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் இரண்டு நபர்களில் ஒருவர் சோயப் அக்தர், மற்றொருவர் நம்ம யுவராஜ் சிங்.
Advertisment
அக்தரோ, தனது சொந்த யூடியூப் சேனலுக்காக தினம் ஒரு வீடியோ வெளியிட்டு, அங்கு லைக்ஸ்களையும், வியூஸ்களையும் அள்ளிக் கொண்டிருக்கிறார். அதுபோல, யுவராஜ் சிங்கும், தனது இன்ஸ்டா பக்கத்தில், கிரிக்கெட் பிரபலங்களுடன் வீடியோ மூலம் பேசி வருகிறார்.
பேசுவது மட்டுமின்றி, எடக்குமுடக்காக கேள்விகளை கேட்டு, எதிராளியை 'இவன் வேற.... நிலைமை தெரியாம பேசிக்கிட்டு' என்று ஃபீல் பண்ண வைத்துவிடுகிறார்.
அதுபோன்று இப்போது சிக்கியவர் ஜஸ்ப்ரித் பும்ரா.
பும்ராவிடம் இன்ஸ்டா மூலம் பேசிய யுவராஜ், மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேன் நானா? தோனியா? என்ற கேள்வியை முன்வைக்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினார் பும்ரா.
பிறகு, 'உங்கள் இருவரில் சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்பது, அம்மா, அப்பாவில் சிறந்தவர் யார் என்று கேட்பது போன்று' என்று அப்படி இப்படி என ஒருமாதிரியாக உருட்டி சமாளித்தார் பும்ரா.
ஆனால், பும்ராவின் சமாளிப்பு பதிலுக்கு யுவராஜ் சமாதானம் ஆகவில்லை.
பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். இளைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். கிரிக்கெட்டின் சிறந்த தூதுவராக விளங்க வேண்டும் என்று பும்ராவுக்கு அட்வைஸ் மழையும் பொழிந்தார் யுவராஜ் சிங்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”