'ஒர்க் ஃபரம் ஹோமில் எல்லோரும் ஜாலியாக வேலை செய்து கொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கலாம். முதலில் இரண்டு மூன்று நாட்களுக்கு அனைத்தும் நன்றாகவே போகும். அதற்கு பிறகு தான் கச்சேரியே. மகனோ, மகளோ வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பெற்றோர்களோ, சொந்தங்களோ கொண்டிருந்த அதிருப்தி கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கும்.
அதாவது, 'அன்னைக்கு நீ ஏன் அப்படி பேசுன? நீ ஏன் அப்படி நடந்துகிட்ட? என என்றோ நடந்த சம்பவத்தை கிளற, அப்போது தான் வீட்டில் வேலை செய்யும் நம்மாட்கள் 'இது என்ன தலைவலியா போச்சு!' என்று ஜெர்க் ஆக ஆரம்பிப்பார்கள்.
மகளுக்காக அவுட் ஆனாரா ரெய்னா? நீங்களே பாருங்க (வீடியோ)
சாமானிய மக்களின் வீட்டில் தான் இந்த கூத்து என்றால், இந்திய கிரிக்கெட் அணியிலும் இதே பிரச்சனை, இதே தலைவலி இப்போது கிளம்பியிருக்கிறது.
இந்திய அணியின் இப்போதைய பண்பாடு குறித்து இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மாவுடன் சாட் செய்த யுவராஜ் சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.
ரோஹித் சர்மா உரையாடலின் போது நடப்பு இந்திய அணிக்கும் யுவராஜ் சிங் வந்த போது இருந்த இந்திய அணிக்குமான வித்தியாசத்தை கேட்ட போது, “நான் அணிக்குள் வந்த போது, அல்லது நீ அணிக்குள் வந்த போது நம் மூத்த வீரர்கள் ஒழுக்கமாக கட்டுக்கோப்புடன் நடந்து கொண்டனர். சமூக ஊடகம் இல்லை, கவனச் சிதறல்களும் இல்லை.
அதாவது மூத்த வீரர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஊடகங்களிடம் எப்படி பேசுகிறார்கள் போன்ற விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். அவர்கள் இந்தியாவில் கிரிக்கெட்டின் தூதர்களாக விளங்கினர்.
ஆனால் இப்போது அப்படியில்லை. இதைத்தான் உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். இந்தியாவுக்கு ஆடிய பிறகே நீங்கள் உங்கள் ஆளுமை குறித்து அக்கறையுடன் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது அணியில் நீயும் விராட் கோலிதான் தான் மூத்த வீரர்கள். நீங்கள் இருவரும் தான் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடுகிறீர்கள். மற்றவர்கள் அவ்வப்போது வந்து போகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட். இன்றைய இளைஞர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆர்வமே இல்லை. அதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதையே மகிழ்ச்சியாக எண்ணுகிறார்கள்.
"கண்ணாடிய திருப்பல; ஆட்டோ ஓடல" - ஆஸி., அணி சரிவுக்கு மைக்கேல் கிளார்க்கின் அரிய கண்டுபிடிப்பு
மூத்த வீரர்களுக்கு மரியாதை என்ற விதத்தில் ஒரு சிலர் தான் உள்ளனர். மூத்த வீரர்கள், இளம் வீரர்களுக்கு இடையே ஒரு சிறிய கோடுதான் உள்ளது. யார் வேண்டுமானாலும் யாரிடமும் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற நிலை இப்போதைய இந்திய அணியில் உள்ளது.
விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, சமூக ஊடகம் எங்கள் காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில் மூத்த வீரர்கள் கடிந்து கொள்வார்கள் என்ற பயம் எங்களுக்கு இருக்கும்" என்றார் யுவராஜ்.
ரோஹித் இன்னும் கொஞ்ச நேரம் சாட் செய்திருந்தால், இன்னும் பல விஷயங்கள் வெளி வந்திருக்கும் போலிருக்கே!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.