Advertisment

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு செக் வைக்க காத்திருக்கும் 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு!

நீதிபதிகள் ஏ.எஸ். பாப்டே மற்றும் பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை இன்று விசாரணை செய்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
11 ADMK MLAs disqualification case details

11 ADMK MLAs disqualification case details : 2016ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். அவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பு வகித்தார். உட்கட்சி விவகாரம் காரணமாக அந்த பொறுப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கப்பட்டது. தன்னை வற்புறுத்தி தான் பதவியில் இருந்து விலக வைத்தார்கள் என்று ஜெ. சமாதி முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார் ஓ. பன்னீர் செல்வம். கட்சிக்குள் பிளவு ஏற்பட்டதன் விளைவாக ஒரு சாரர் எடப்பாடி பழனிசாமிக்கும், மற்றொரு பிரிவினர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் ஆதரவு தந்தனர்.

Advertisment

பின்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பு 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது.  ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக ஓ.பி.எஸ், பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், நட்ராஜ், ஆறுகுட்டி, சின்னராஜ், மனோரஞ்சிதம், சரவணன், மாணிக்கம், மனோகரன் உள்ளிட்ட 11 பேர் வாக்களித்தனர். கொறடாவை மீறி இவர்கள் வாக்களித்தனர்.

சில நாட்கள் கழித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் முதல்வரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். ஆனால் அந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து அறிவித்தார் சபாநாயகர் தனபால். அதே போன்று இந்த 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த இந்திரா பானர்ஜி, சபாநாயகரின் உத்தரவில் தலையிட இயலாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்தார்.

உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிற்கு இந்த வழக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என திமுக சார்பிலும், தங்கதமிழ்செல்வன் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதனை ஏற்ற உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை இன்று நடத்த உள்ளது. நீதிபதிகள் ஏ.எஸ். பாப்டே மற்றும் பி.ஆர். கவாய் அடங்கிய அமர்வு இதனை விசாரணை செய்கிறது.

தமிழக சட்டமன்ற பெரும்பான்மை :

சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிபட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், திருவாரூர் ஆகிய தொகுதிகளில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

மே 19ம் தேதி சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் மே 23ம் தேதி வெளியானது.

தேர்தல் முடிவுகள்

சோளிங்கர், பாப்பிரெட்டிபட்டி, ஆரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், சூலூர் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று 114 என்று இருந்த தங்களின் பெரும்பான்மையை 123 ஆக உயர்த்திக் கொண்டனர்.

பெரம்பலூர், திருப்போரூர், குடியாத்தம், ஆம்பூர், ஓசூர், திருவாரூர், தஞ்சாவூர், ஆண்டிபட்டி, பெரியகுளம், பூந்தமல்லி, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுக.  234 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டசபையில் 118 இடங்களை பெறும் கட்சி ஆட்சியை தக்க வைக்கிறது. 110 இடங்களை திமுகவும் பெற்றுள்ளது. இந்த 11 பேரையும் பதவி நீக்கம் செய்தால் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் சமீபத்தில் விருதாச்சலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு அமமுகவிற்கு ஆதரவு அளித்து வருகிறனர் என்று கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்ய, சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள

Tamil Nadu Dmk Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment