காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சி டிச.17ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் கல்ந்துகொள்ள தமிழ்நாட்டில் இருந்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 1500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதற்கான போர்ட்டலை சென்னை ஐஐடி உருவாக்கி உள்ளது. இது குறித்து, கோட்ட ஆணையர் கவுஷல் ராஜ் சர்மா, “விருந்தினர்கள் தங்க முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நமோ காட் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஹோட்டல்கள் அறைகளிலும் விருந்தினர்கள் தங்க, சாப்பாடு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த பணிகள் டிச.15ஆம் தேதிக்குள் நிறைவு பெறும்” என்றார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில், காசி தமிழ்ச் சங்கமம் கடந்த வருடம் நடைபெற்றது. இதற்காக தமிழகத்தில் இருந்து 2,500 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
பண்டைய இந்தியாவில் கற்றல், கலாச்சார மையங்களாக திகழந்த காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான வாழ்க்கை பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், ’ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற திட்டத்தின்கீழ் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த காசி தமிழ் சங்கமத்தில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து சுமார் 1,400 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்கள், வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு ரயிலில் சென்று வர திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க : மீண்டும் காசி தமிழ் சங்கமம்: பங்கேற்க விண்ணப்பம் செய்வது எப்படி?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“