சென்னையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒரு மருத்துவரின் வங்கி விபரங்கள் மற்றும் ஓடிபிக்களை பயன்படுத்தி, புதிய மொபைல் போன்களை வாங்கவும், பப்ஜி மற்றும் ஃப்ரீஃபைர் போன்ற ஆன்லைன் கேம்களில் பிரீமியம் பேக்குகளை வாங்கவும் ரூ 7.5 லட்சம் திருடியதாகக் கூறப்படுகிறது. புகார் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், சிறுவனை எச்சரித்து விட்டு, போலீஸார் அவனை விடுவித்துள்ளனர்.
பாரம்பரிய சுவையுடன் வத்தக் குழம்பு: எளிதான செய்முறை இங்கே!
பாதிக்கப்பட்ட 76 வயதான அந்த மருத்துவர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது பிள்ளைகள் வெளி மாநிலத்தில் இருப்பதால், அந்த மருத்துவர் தனியாக இருக்கிறார். ஒரு பணிப்பெண்ணும் அவரது மகனும் மருத்துவர் வீட்டின் முதல் தளத்தில் வசிக்கிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். "ஒரு தனியார் பள்ளியில் படித்த சிறுவன், மருத்துவர் வெளியே செல்வதற்கும், கேஜெட்களைப் பயன்படுத்துவதற்கும் உதவியாக இருந்திருக்கிறான்" என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு உதவும்போது சிறுவன் அந்த மருத்துவரின் கிரெடிட் கார்டின் விவரங்களை சேகரித்ததாகக் கூறப்படுகிறது. “ஒரு பப்ஜி அடிமையாக இருந்த சிறுவன், விளையாட்டில் பிரீமியம் பேக்குகளை வாங்க மருத்துவரின் அட்டையைப் பயன்படுத்தியிருக்கிறான். சாம்பியன்ஷிப் விளையாட்டுகளுக்கு முன்பதிவு செய்ததோடு, எந்தவித இடையூறும் இல்லாமல் விளையாடுவதற்காக, ரூ .30,000 மதிப்புள்ள மொபைல் ஃபோனையும் வாங்கியிருக்கிறான். அதை விளையாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தினான்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
அந்த சிறுவன் தனது நண்பர்களுக்காகவும் மொபைல் போன்களை வாங்கினார். அண்மையில் மருத்துவர் தனது வங்கி அறிக்கையை பரிசோதித்தபோது, கடந்த ஒரு வருடத்தில் குறைந்தது ரூ .7.5 லட்சம் காணாமல் போன சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் அண்ணா நகர் சைபர் பிரிவை அணுகியிருக்கிறார்.
போட்டோவைப் பார்த்து ஏமாறாதீங்க… ஆன்லைன் ஆடைகள் ஷாப்பிங் அசத்தல் டிப்ஸ்
தனது மொபைலில் பப்ஜி ப்ரீமியம் பேக் வாங்கிய செய்திகளை போலீசார் கண்டுபிடித்தபோது சிறுவன் ஒப்புக்கொண்டான். இருப்பினும், சிறுவனின் வாழ்க்கையைக் கெடுக்க விரும்பவில்லை என்று மருத்துவர் புகாரை வாபஸ் பெற்றார். மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”