ரேஷன் கடைகளில் 500 ரூபாய் மதிப்புடைய 19 பொருள்கள் அடங்கிய மளிகை பொருள் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Advertisment
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 15-ம் தேதி வரை இந்தியா முழுவதும் பிரதமர் மோடி முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தமிழக அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பொது மக்கள் மளிகை பொருட்களை வாங்குவதற்காக வெளியில் கூட்டம் கூட்டமாக சமூக இடைவெளி இல்லாமல் வலம் வருவது அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதனைத் தடுக்க தமிழக அரசு சார்பில் ரூ. 500-க்கு 19 வகையான மளிகை பொருட்கள் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவரம் பின்வருமாறு:
இதுகுறித்து, தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
துவரம் பருப்பு - 1/2 கிலோ,
உளுத்தம் பருப்பு - 1/2 கிலோ,
கடலை பருப்பு -1/4 கிலோ,
மிளகு - 100 கிராம்,
சீரகம் - 100 கிராம்,
கடுகு - 100 கிராம்,
வெந்தயம் - 100 கிராம்,
தோசை புளி -250 கிராம்,
பொட்டுக் கடலை - 250 கிராம்,
நீட்டு மிளகாய் - 150 கிராம்,
தனியா - 200 கிராம்,
மஞ்சள் தூள் - 100 கிராம்,
டீ தூள் - 100 கிராம்,
உப்பு - 1 கிலோ,
பூண்டு - 250 கிராம்,
Gold winner Sun flower Oil - 200 கிராம்,
பட்டை - 10 கிராம்,
சோம்பு - 50 கிராம்,
மிளகாய் தூள் - 100 கிராம்,
ஏழை, எளிய மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 19 வகையான மளிகை பொருட்கள் தமிழக அரசு நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”