/tamil-ie/media/media_files/uploads/2017/11/man-drinking-alcohol_750.jpg)
Tasmac, Alcohol, 2 persons arrested for making wine at home with the help of youtube
Corona Lockdown : கொரோனா லாக் டவுன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் தவிர, மற்ற அனைத்துமே மூடப்பட்டிடுக்கின்றன. இந்த சமயத்தில் குடிக்கு அடிமையாக இருந்த சிலர், மதுபானம் கிடைக்காத இந்த நாட்களைப் பயன்படுத்திக் கொண்டு, அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இன்னும் சிலரோ மது கிடைக்காத விரக்தியில் என்ன செய்வதென அறியாமல் தவித்து வருகின்றனர்.
தமிழகம் உட்பட 19 மாநிலங்களில் கொரோனா தொற்று வேகம் குறைகிறது: மத்திய அரசு
இந்நிலையில் யூட்யூப் பார்த்து மதுபானம் தயாரிக்க முயன்ற இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் ராகுல் (22). இவர் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பரான வினோத் ராஜ் (26) என்பவர் மார்கெட்டிங் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவரும் குடிப்பழக்கம் கொண்டவர்கள் எனத் தெரிகிறது.
ஊரடங்கால் மதுபானக் கடைகள் திறக்கப்படாததால் இருவரும் குடிக்க முடியாமல் தவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இருவரும் யூட்யூப் பார்த்து மதுபானம் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி திராட்சை, நாட்டு சர்க்கரை, பட்டை இலை மற்றும் சில பொருட்களை வைத்து வீட்டிலேயே மதுபானம் தயாரிக்க முயன்றுள்ளனர்.
எத்தனை புலிகள் இங்கு மறைந்திருக்கின்றன? கண்டுபிடிங்க பார்ப்போம்
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் அங்கு விரைந்தனர். அப்போது மது தயாரிப்பில் ஈடுபட்ட இருவரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.