29-year-old man killed for protest against auctioning of rural local body elections
29-year-old man killed for protest against auctioning of rural local body elections : விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டியை சேர்ந்தவர் எம். சதீஸ்குமார். இவர் தனியார் வங்கி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தலைவர்களை தேர்வு செய்வது தொடர்பான கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், எப்படி உள்ளாட்சி தலைவர் பதவியை ஏலம் மூலம் விற்பீர்கள் என்று கேள்வி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பலரும் அவரை தாக்க துவங்கினர். இதனால் சதீஸ் குமார் பலத்த காயம் அடைந்தார்.
Advertisment
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...
அவர் தாக்கப்பட்ட செய்தி சதீஸ் குமாரின் உறவினர்களுக்கு சொல்லப்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த சதீஸ்குமாரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள், சதீஸ் உயிரிழந்ததாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை கொலையாளிகளாக கருதி கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டட்னர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக நிர்வாகிகள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ராமசுப்பு, முத்துராஜ், சுப்புராம், செல்வராஜ், சுப்புராஜ், கணேஷ், ராம்குமார் ஆகியோர் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மாவட்ட நீதிபதியின் முன்பு ஆஜர் செய்யப்பட்டனர். இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் ஆர். கண்ணன் கூறுகையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதிய உணவு வழங்கும் செல்வராஜ் இந்த வழக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். ஏலம் தொடர்பாக கேள்விகள் எழுந்த போது காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர். நாயுடு இனத்தில் இருந்து சரியான போட்டியாளரை தேர்வு செய்வதற்காக தான் இந்த கூட்டம் நடைபெற்றது என்றும் மக்கள் கூறியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இறந்த போன சதீஸின் உடலில் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை. தலையில் மட்டும் தான் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் காவல்துறை கூறியுள்ளது.