மதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு: சைக்கிள் சின்னம் கேட்டு ஜி.கே.வாசன் வழக்கு

Chennai Petrol Diesel Price : சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 6 காசுகள் குறைந்து ரூ.77.86க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் ரூ.69.81க்கு விற்பனை செய்யப்படுகிறது.

By: Dec 14, 2019, 7:10:21 AM

Tamil Nadu breaking news today updates : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை தீவிரமாக அரசு செய்துவருகிறது. திருச்சியில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி மாவட்டங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றியதாக, பகிர்ந்ததாக பல ஐபி அட்ரெஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!

குடியுரிமை சட்ட திருத்த மசோதா

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். அசாமில் தொடர்ந்து கலவரங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் அசாம் மாநிலத்தின் திப்ருகார் பகுதியில் மட்டும் இன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.

Live Blog
Tamil Nadu breaking news today updates petrol diesel price, chennai weather, tamil nadu politics, dmk, admk: இன்று தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிய இந்த இணைப்பில் இணைந்திருங்கள்
22:07 (IST)13 Dec 2019
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரில் காயம் காரணமாக புவனேஷ்குமார் நீக்கம்

காயம் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் இருந்து இந்திய மித வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும். இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காயம் காரணமாக ஷிகர் தவான் விலகிய நிலையில் இரண்டாவது வீரராக புவனேஸ்வர் குமார் விலகல் அமைந்திருக்கிறது.

20:38 (IST)13 Dec 2019
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக

தமிழகத்தில் டிசம்பர் 27, 30 தேதிகளில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளிடப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

20:27 (IST)13 Dec 2019
குடியுரிமை சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டம்; உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னையில் குடியுரிமை சட்ட நகலை எரித்து, சாலை மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 644 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

19:11 (IST)13 Dec 2019
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அரசின் முடிவுக்கு பிறகும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

18:42 (IST)13 Dec 2019
ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக ஸ்மிருதி இரானி புகார் மனு

ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் மனு அளித்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தை ரேப் இன் இந்தியா என ராகுல் காந்தி விமர்சனம் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது என ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

18:30 (IST)13 Dec 2019
குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் கைதான உதயநிதி ஸ்டாலின் விடுதலை

குடியுரிமை சட்டதிருத்ததிற்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டு கைதான தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.

18:23 (IST)13 Dec 2019
நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடம் குறித்து விவாதித்து வருகிறோம் - மக்களவை சபாநாயகர்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா: நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடம் குறித்து விவாதித்து வருகிறோம். 2022இல் 75வது சுதந்திர தினத்தில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் புதிய அமர்வை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

17:41 (IST)13 Dec 2019
உள்ளாட்சி தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம்; நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம்

உள்ளாட்சித் தெர்தலில் மாநில தேர்தல் ஆணையம் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது. அதே போல, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது.

17:16 (IST)13 Dec 2019
உள்ளாட்சி தேர்தலில் சைக்கிள் சின்னம் கோரி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வழக்கு

உள்ளாட்சி தேர்தலில் சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். தமாகாவுக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னத்தை ஒதுக்க கோரிய வழக்குடன் சேர்த்து டிசம்பர் 16 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

16:44 (IST)13 Dec 2019
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

16:02 (IST)13 Dec 2019
பாலியல் குற்றங்களை 21 நாட்களில் விசாரித்து தண்டனை அளிக்கும் மசோதா நிறைவேற்றம்

பாலியல் குற்றங்களை 21 நாட்களில் விசாரித்து தண்டனை அளிக்கும் மசோதா, ஆந்திர சட்டசபையில் நிறைவேறியது.  பாலியல் வன்கொடுமை குற்றங்களை 21 நாட்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

15:35 (IST)13 Dec 2019
நடிகர் சங்கத்துக்கு மறுதேர்தல் நடத்த அரசு தயார்

நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டதல் மறுதேர்தல் நடத்த அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

15:11 (IST)13 Dec 2019
நிர்பயா வழக்கு டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நிர்பயா குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் போட வேண்டும் எனக்கூறி, அவரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கு விசாரணை டிச.,18 க்கு டில்லி கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

14:54 (IST)13 Dec 2019
சென்னை மாநகராட்சியில் ஊழல் – ஸ்டாலின் பகீர்

சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்கு பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

14:29 (IST)13 Dec 2019
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2 நாளுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு. உள்மாவட்டங்களில், லேசானது முதல் மிதமான மழையும், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

14:26 (IST)13 Dec 2019
உலகின் சக்திவாய்ந்த பெண்கள் – நிர்மலா சீதாராமனுக்கு 34வது இடம்

போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடம்பிடித்துள்ளார். முதலிடத்தில் ஜெர்மன் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்கெலும், இரண்டாவது இடத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டினா லெக்ராண்ட் உள்ளனர்.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்திலும், இங்கிலாந்து மகாராணி எலிசபெத் 40வது இடத்திலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவானா டிரம்ப் 42வது இடத்திலும் உள்ளனர்.

13:33 (IST)13 Dec 2019
உள்ளாட்சி தேர்தல் வழக்கில் மீண்டும் தலையிட விரும்பவில்லை- உச்சநீதிமன்றம்

உள்ளாட்சி தேர்தல் உத்தரவில் சந்தேகம் கேட்ட திமுகவின் கோரிக்கை நிராகரிப்பட்ட நிலையில், உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்கில் மீண்டும் தலையிட விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

12:21 (IST)13 Dec 2019
மறுசீராய்வு மனுக்கல் விசாரணை வரும் வரை காத்திருங்கள்

சபரிமலை கோவிலுக்கு செல்லும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என பிந்து அம்மிணி மற்றும் ரெஹானா பாத்திமா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மறுசீராய்வ் மனுக்கல் விசாரணை வரும் வரை காத்திருங்கள் என எஸ்.பாப்டே அறிவித்திருந்தார்.Supreme Coutt declines to pass any order on prayer by women activists Bindu Ammini & Rehana Fathima seeking protection to visit Sabarimala temple. CJI SA Bobde asks them to wait till review petitions are decided. @IndianExpress— Ananthakrishnan G (@axidentaljourno) December 13, 2019

12:19 (IST)13 Dec 2019
தங்கம் விலை குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்துள்ளது. தற்போது தங்கம் ரூ. 28,728க்கு விற்பனையாகி வருகிறது.

12:04 (IST)13 Dec 2019
திமுகவினர் கைது

கரூர், கும்பகோணம், சேலம், தஞ்சை, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டங்களில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணியினர் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் அனைவரையும் காவல் துறை கைது செய்தது.

12:01 (IST)13 Dec 2019
பாஜக எம்பிகள் போராட்டம் - அவை ஒத்தி வைப்பு (2/2)

ராகுல் காந்தியின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பிகள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரு அவைகளும்  ஒத்தி வைப்பு. 

12:00 (IST)13 Dec 2019
பாஜக எம்பிகள் போராட்டம் - அவை ஒத்தி வைப்பு (1/2)

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பினார். மேக் இன் இந்தியாவுக்கு பதிலாக எங்கும் ரேப் இன் இந்தியாவாக தான் இருக்கிறது. பாஜக எம்.எல்.ஏ உன்னாவ் கொலைவழக்கில் முக்கிய குற்றவாளி. மோடியால் இது குறித்து பதில் கூற முடிந்ததா என்று கேள்வி எழுப்பினார்.

11:43 (IST)13 Dec 2019
உதயநிதி ஸ்டாலின் கைது

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் திமுக இளைஞரணி சார்பில் நகல் கிழிப்பு போராட்டம் நடைபெற்றது. அதில் 200க்கும் மேற்பட்ட திமுகவினர் கைது.

11:19 (IST)13 Dec 2019
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.27 லட்சம் பறிமுதல்

சென்னை கே.கே. நகர் அரசு மருத்துவமனை அருகே நேற்று இரவு இரு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

11:17 (IST)13 Dec 2019
ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை : சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தள்ளுபடி

இந்திய தேசிய மாணவர் சங்க தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இன்று நடத்தியது சென்னை உயர் நீதிமன்றம். சி.பி.ஐ விசாரணை வேண்டும் என கோரிய வழக்கினை ரத்து செய்து அறிவித்தது நீதிமன்றம். சிபிஐயில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசு தரப்பு விளக்கம் அளித்தது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.

10:49 (IST)13 Dec 2019
England election latest updates

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 308 இடங்களில் முன்னிலை, தொழிலாளர் கட்சி 192 இடங்களில் முன்னிலை.

10:32 (IST)13 Dec 2019
இரண்டு சிறுமிகள் விற்பனை

திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 2 சிறுமிகள் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. குழந்தைகளின் பாட்டி, இடைத்தரர்களாக பணியாற்றியவர்கள் என  அனைவரும் கைது 

10:18 (IST)13 Dec 2019
இன்றுடன் நிறைவடைகிறது குளிர்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தில் நவம்பர் 18ம் தேதி துவங்கியது இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர். ஈ சீகெரெட் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை, உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரிகுறைப்பு, தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம், குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்யப்பட்டது.

09:51 (IST)13 Dec 2019
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தல்

இங்கிலாந்து நாட்டில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. தற்போது வாக்குகள் எண்ணும் பணி தீவிரமடைந்துள்ளது. போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 234 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தொழிலாளர்கள் கட்சி 156 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் பின் தங்கி இருப்பதால் இக்கட்சியின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் ஜெரேமி கார்பைன்.

09:47 (IST)13 Dec 2019
போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாந்திநகரில் 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவியை பாலியல் பலாத்கார செய்ய முயற்சித்த வினோத்குமார் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தது காவல்துறை

09:47 (IST)13 Dec 2019
மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 120 அடியாக உள்ளது. நீர் இருப்பு 93.470 டி.எம்.சியாகவும், நீர் வரத்து 4,988 கன அடியாகவும், வெளியேற்றம் 4000 கன அடியாகவும் உள்ளது.

09:29 (IST)13 Dec 2019
Weather updates

தமிழகத்தின் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதே போன்று புதுவையின் காரைக்காலிலும் பலத்த மழை பெய்து வருகிறது.

09:18 (IST)13 Dec 2019
வங்க அமைச்சர்கள் வருகை ரத்து

இந்தியாவுக்கு வர இருந்த வங்க தேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமென் மற்றும் உள்துறை அமைச்சர் அசாதுஸாமன் கான் தங்களுடைய இந்திய வருகையை ரத்து செய்துள்ளனர். இது குறித்து மோமெனிடம் கேள்வி எழுப்பிய போது, இந்தியா தன்னுடைய மதசார்பின்மை தன்மையில் இருந்து விலகி பலவீனம் அடைந்து வருகிறது என்று கூறியுள்ளார். 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை இந்தியன் ஓசன் டையலாகின் 6வது மாநாட்டிற்கு வருகை புரிய திட்டம் தீட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu breaking news today updates : ராஜ்யசபையில் 11ம் தேதி இரவு குடியுரிமை சட்டம் திருத்த மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வடகிழக்கு இந்திய மாநிலங்களின் பல்வேறு  பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது. சில இடங்களில் இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் முடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றத்திற்கு அதிருப்தி தெரிவித்து பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க

நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் குறித்த தீர்ப்பினை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிர்மோகி அக்கரா உள்ளிட்ட 18 மறுசீராய்வு மனுக்களை தாக்கல் செய்தனர். எஸ்.போப்டே தலைமையில் அமைக்கப்பட்ட 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த 18 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது தொடர்பான முழுமையான செய்திகளையும் படிக்க

Web Title:Tamil nadu breaking news today live updates citizenship amendment bill assam bjp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X