3 மனிதர்களை கொன்றதால் இடம் மாற்றப்பட்ட யானை; மசினகுடியில் மர்மமான முறையில் மரணம்

இடம் மாற்றம் செய்யப்பட்டதால் இறந்து போன 2வது யானை இதுவாகும். 2016ம் ஆண்டு கட்டையன் என்ற யானை வரகளியாறு பயிற்சி முகாமில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

By: Updated: July 10, 2020, 10:03:40 AM

Mystery surrounds death of 32-year-old elephant relocated from Hosur after killing 3 people :  15 நாட்களில் ஓசூர் வனப்பகுதியில் மூன்று மனிதர்களை கொன்ற யானையை பிடித்த வனத்துறையினர் அதனை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கீழ் வரும் பவானிசாகர் வனச்சரகத்தின் மங்கலப்பட்டி பகுதியில் விடுவித்தனர். அதன் கழுத்தில் ரேடியோ அலை வரிசைகள் கொண்டு கண்காணிக்கப்படும் காலர் மாட்டப்பட்டிருந்தது. மங்கலப்பட்டி பகுதியில் அந்த யானையை விடும் போது மாட்டப்பட்டது. அதன் மூலம் யானையின் நடமாட்டம் கண்டறியப்பட்டது.

மேலும் படிக்க : ‘பாப் கட்டிங்’ செங்கமலம் யானை – சோஷியல் மீடியாவில் கூட ரசிகர்கள்

மங்கலப்பட்டியில் விடுவிக்கப்பட்ட யானை இங்கும் அங்கும் உலாத்திக் கொண்டிருந்தது. சில நேரங்களில் மோயாற்றினை தாண்டி தெங்குமறடா வரை சென்று, வயல் பகுதிகளில் சுற்ற துவங்கியது. இதனால் அவ்வூர் பகுதி மக்கள் இரவில் நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்தனர் வனத்துறையினர். மீண்டும் மோயாற்றினை தாண்டி சேகுர் வனச்சரகத்திற்கு சென்றது. அங்கிருக்கும் புல்லை தின்று சுற்றி வந்து கொண்டிருந்தது யானை. புதிய இடத்திற்கு யானை பழகிவிட்டதாக வனத்துறையினர் நம்பினர். ஆனால் புதன்கிழமை பகல் 2 மணிக்கு மசினகுடி பகுதியில் இருக்கும் சேகுர் வனச்சரகத்தில் இந்த யானை இறந்த செய்தி கிடைத்துள்ளது.

யானையின் முகத்தில் தந்தம் இருப்பதால் வேட்டைக்காக அது கொல்லப்படவில்லை என்று வனத்துறையினர் கூறுகின்றனர். ஆனாலும் உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியான பிறகே இறப்பிற்கான காரணம் தெரிய வரும்.

இடம் மாற்றம் செய்யப்பட்டதால் இறந்து போன 2வது யானை இதுவாகும். 2016ம் ஆண்டு மதுக்கரை பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த மகாராஜா என்ற கட்டையன் யானை வரகளியாற்றில் உள்ள கும்கி முகாமில் கராலில் மோதி உயிரிழந்தது. மதுக்கரையில் யானையின் நடமாட்டம் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் டாப்சிலிப் பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது இந்த யானை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mystery surrounds death of 32 years old elephant relocated from hosur after killing 3 people

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X