அனைத்து போக்குவரத்து வசதிகளும், மூடப்பட்ட நிலையில், பெருமளவு ஆம்புலன்ஸ்கள் தமிழ்நாட்டிலுள்ள கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றன.
வீட்டில் இருந்தபடியே செல்போன் ரீசார்ஜ்: எளிய வழிகள், இணையதள முகவரிகள் இங்கே..!
108 ஆம்புலன்ஸ்கள் மூலம் கொண்டு செல்லப்படும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கையில் கணிசமாக அதிகரித்துள்ளதாக, இந்த வாகனங்களை சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்படுத்தி வரும், ஜி.வி.கே-இ.எம்.ஆர்.ஐ மாநிலத் துறைத் தலைவர் எம்.செல்வக்குமார் தெரிவித்தார்.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, மாநிலம் முழுவதும் அவசர சேவைகளுக்காக 950 ஒற்றைப்படை ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதில், கோவிட் -19 பாஸிட்டிவ், மற்றும் சந்தேகத்திற்குரியவர்களை கொண்டு செல்ல மட்டும் 120 ஆம்புலன்ஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக, 108 சேவை சுமார் 3,500 எமர்ஜென்ஸி கேஸ்களை கையாளும். இதில் 700 கேஸ்கள் சாலை விபத்துகளுடன் தொடர்புடையதாக இருக்கும். தற்போது பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், சாலை விபத்துக்கான அழைப்புகள் இரட்டை இலக்கமாக குறைந்துள்ளன. ஏப்ரல் நான்காவது வாரத்தில், சுமார் 70 சாலை விபத்துக்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.
மறுபுறம், ஆம்புலன்ஸை அழைக்கும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை இப்போது 20% முதல் 35% ஆக உயர்ந்துள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 1,000 அழைப்புகள் வருகின்றன. "இதில் டெலிவரி மற்றும் வழக்கமான செக்கப் அழைப்புகள் அடங்கும்" என்று ஜி.வி.கே-ஈ.எம்.ஆர்.ஐ-யின் செல்வக்குமார் தெரிவித்தார். இவர்களில் சிலர் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வழியில் கடுமையான பிரசவ வலியால் அவதிப்படுவதாகவும், சிலருக்கு ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்து விடுவதாகவும் கூறினார்.
இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில், ஜவ்வாது மலைக்கு அருகிலுள்ள மொட்டூர் கிராமத்தில் வசிக்கும் 19 வயது பெண், ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான பிரசவ வலியால் துடித்தார். முழுமையான பூட்டுதல் என்பதால், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்ல, ஒரு வாகனமும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் 108-ஐ அழைத்தனர். சில நிமிடங்களில், ஆம்புலன்ஸ் அவர்களது வீட்டு வாசலில் வந்து நின்றது. அந்தப் பெண்ணை அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. வாகனம் கல்யாண மந்தை கிராமத்தைக் கடக்கும்போது, பனிக்குடம் உடைய தொடங்கியது. எனவே ஆம்புலன்சில் உள்ளவர்கள் அங்கேயே பிரசவம் பார்த்தனர். பின்னர் அந்தப் பெண், ஒரு ஆண் குழந்தையை பிரசவித்தார்.
Ayushman Bharat: மத்திய அரசு இன்சூரன்ஸ், ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?
இதுபோன்ற அவசரநிலைகள் மட்டுமல்லாமல், ஸ்டோக் மற்றும் டயாலிசிஸ் நோயாளிகளையும் வழக்கமான பரிசோதனைகளுக்காக 108 ஆம்புலன்ஸ் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கின்றன என்று தரவுகள் கூறுகின்றன. சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைந்து சென்னையில் மூன்று டயாலிசிஸ் மையங்களை நடத்தி வரும் டேங்கர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லதா குமாரசாமி, ”108 ஆம்புலன்ஸுடன் சில நபர்களும் நோயாளிகளுக்கு உதவுகிறார்கள். சற்று தாமதமானாலும், பத்திரமாக கொண்டு சேர்த்து விடுகிறார்கள்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.