/tamil-ie/media/media_files/uploads/2019/01/cats-29.jpg)
யானைகள் புத்துணர்வு முகாம்
கோவை மாவட்டம், தேக்கம்பட்டியில் 48 நாட்களாக நடந்து வந்த கோவில் யானைகள் புத்துணர்வு முகாம் நேற்றோடு (30/01/2018) முடிந்தது. தமிழகத்தில் உள்ள் கோவில்கள் மற்றும் மடங்களில் இருக்கும் யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் 2003ம் ஆண்டில் இருந்து புத்துணர்வு முகாம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வருடம் 28 யானைகள் இந்த முகாமில் ஓய்வு அளிக்கப்பட்டு வந்தது.
யானைகள் புத்துணர்வு முகாம் : 28 யானைகள் பங்கேற்பு
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தெப்பக்காட்டிலும், கோவை மேட்டுப்பாளையும் தேக்கப்பட்டியிலும் இந்த புத்துணர்வு முகாம்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான புத்துணர்வு முகாம் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதியில் இருந்து துவங்கியது. நடைபயிற்சி, குளியல் , சமச்சீர் உணவு, மருத்துவ பராமரிப்பு என அனைத்தும் இந்த புத்துணர்வு மையங்களில் யானைகளுக்கு தரப்படுவது வழக்கம்.
இந்த முகாம் நேற்று முடிவடைந்த நிலையில், அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொடியசைத்து 28 யானைகளை வழியனுப்பி வைத்தார். மிகவும் வருத்தத்துடன் யானைகளை வழியனுப்பி வைத்தனர் அங்குள்ள யானை பாகன்கள் மற்றும் அந்த முகாம்களில் இருந்தவர்களும்.
மேலும் படிக்க : “வா விளையாடலாம் வா…” அடம் பிடிக்கும் யானை… ரசிக்க வைக்கும் வைரல் வீடியோ
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.