Advertisment

கொரோனா பணியாளர்களுக்கு இதுவே கௌரவம் : தனியார் பள்ளியின் மகத்தான செயல்!

மேலும் கணினி பயிற்சிகள் போன்ற மாணவர்கள் மேம்பாட்டு திறன் பயிற்சிகளுக்கு கட்டணம் ஏதும் வாங்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SyllabusForStudents2020

SyllabusForStudents2020

50 per cent special concession on corona workers in Sivagangai private school : இந்த கொரோனா காலத்தில், தங்களின் உயிரையும்  பொருட்படுத்தாது ஆயிரக் கணக்கானோர் தினமும் பணியாற்றி வருகின்றனர். சிலர் நோய் தொற்றுக்கு ஆளாகி, உயிரிழக்கும் சோகமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.

Advertisment

மேலும் படிக்க : கொரோனா வைரஸ் எங்கிருந்து வந்தது? இந்தியா உட்பட 62 நாடுகள் தீர்மானம்

சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் மௌண்ட் லிட்டேரா ஜீ பள்ளி மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது கொரோனா நோய் தடுப்பு பணியில் தங்களை அர்பணித்திருக்கும் ஊழியர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை, மருத்துவத்துறை, ஊடகத்துறை, அரசுத்துறை அலுவலர்களை கௌரவிக்கும் வகையில், அவர்களின் குழந்தைகளுக்கு, மாணவர் சேர்க்கையின் போது கல்வி கட்டணத்தில் 50% சலுகை அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளது. மேலும் கணினி பயிற்சிகள் போன்ற மாணவர்கள் மேம்பாட்டு திறன் பயிற்சிகளுக்கு கட்டணம் ஏதும் வாங்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : 55 நாட்களுக்கு பிறகு திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள்!

ஜீ பள்ளியின் இந்த அறிவிப்பு மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தனியார் கல்வி நிறுவனங்கள், லாப நோக்கில் செயல்படாமல் கல்வி கட்டணத்தை குறைத்து, கொரோனா தடுப்பு பணியாளர்களின் சுமையை குறைப்புதும் கௌரவிப்பது தான் என்று மனதார பாராட்டி வருகின்றனர் மக்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment