55 நாட்களுக்கு பிறகு திருப்பதியில் அலைமோதிய பக்தர்கள்!

கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் சமூக இடைவெளி பின்பற்றி லட்டு மற்றும் வடை ஆகியவற்றை பிரசாதமாக பக்தர்கள் வாங்கி சென்றனர்.

Tirumala Tirupati devotees in the long queue to get special food offerings
Tirumala Tirupati devotees in the long queue to get special food offerings

Tirumala Tirupati devotees in the long queue to get special food offerings:  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்ற சூழலில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி அன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் திருமலை திருப்பதி கோவிலில் ரத்து செய்யப்பட்டது.

மேலும் படிக்க : பணமின்றி தவிக்கும் திருப்பதி கோவில்! ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் சிக்கல்…

பல்வேறு மத வழிபாட்டுத்தலங்கள், பொதுப்போக்குவரத்து, பொது நிகழ்வு ஆகியவற்றில் பங்கேற்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. திருப்பதி உலகிலேயே மிகவும் செல்வாக்கான கோவில் என்ற காரணத்தால் அங்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

மேலும் படிக்க : கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்ட கணவன் ; மனைவி இறந்ததால் மருத்துவ சிகிச்சைகளை மறுத்து மரணம்!

பல்வேறு நேர்த்திக்கடன் காரணங்களுக்காக கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் 55 நாட்கள் கழித்து திருமலையில் சுவாமிக்கும ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று, வடை மற்றும் லட்டு நைவேத்தியமாக படைக்கப்பட்டது. பின்னர் இதனை வாங்க பிரசாத மையத்தில் பக்தர்கள் அதிகமாக ஒன்று திரண்டனர். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் சமூக இடைவெளி பின்பற்றி லட்டு மற்றும் வடை ஆகியவற்றை பிரசாதமாக பக்தர்கள் வாங்கி சென்றனர். அதிகாரிகள்  ” வருங்காலத்தில் பக்தர்களுக்கு தேவையான எண்ணிக்கையில் லட்டு, வடை பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும்”  என்று  தெரிவித்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tirumala tirupati devotees in the long queue to get special food offerings

Next Story
Corona Updates: புதுச்சேரியில் மதுக்கடை திறப்பு திடீர் தள்ளிவைப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com