/tamil-ie/media/media_files/uploads/2019/11/11125.jpg)
6 months toddler dead after arriving Chennai
6 months toddler dead after arriving Chennai : கீதா மற்றும் சக்தி முருகன் இருவரும் தாம்பரத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதியினர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருகின்றனர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தின் மூலம் புதன் கிழமை இரவு வந்துள்ளனர். அவர்களுக்கு 6 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு ஹ்ரித்திக் என்று பெயரிட்டுள்ளனர். இந்த 6 மாத குழந்தைக்கு இது தான் முதல் விமான பயணம்.
ஆஸ்திரேலியாவில் இருந்து பயணமானவர்களின் விமானம் கோலா லம்பூரில் முதலில் தரையிரங்கியது. அப்போது குழந்தைக்கு உணவு தரப்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்னைக்கு மீண்டும் பயணமானார்கள்.
சென்னை விமான நிலையத்தில் இமிக்ரேசன் க்ளியர் செய்த போது குழந்தை அசைவற்று இருப்பதை கீதா கவனித்தார். குழந்தையின் கால்கள் நீலமாக மாறியிருப்பதை கண்ட அவர்கள் உடனே குழந்தையை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க : ஆழ்துளைக் கிணற்றில் இருந்து 20 நிமிடங்களில் வெளியே எடுக்கப்பட்ட சுஜித் உடல்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us