திருவள்ளுவரில் பணியிடை மாற்றம் செய்யப்பட்ட அரசு பள்ளி ஆசிரியரை போக விடாமல் மாணவர்கள் கதறி அழுத சம்பவம் தேசிய அளவில் செய்தியாக பரவியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நம் அனைவரையும் பள்ளி பருவத்திற்கு அழைத்து சென்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர் தான் பகவான். பணியிடை மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு போகவிடாமல் தடுத்த மாணவர்கள் கதறி அழுதது, போராட்டத்தில் குதித்தது தேசி ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெளியகரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிப்புரிந்து வரும் பகவானை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் திடீரென்று இடமாற்றம் செய்தனர். இந்த இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாத அந்த பள்ளியின் மாணவர்கள் கதறி அழு ஆரம்பித்தனர்.அந்த ஆசிரியரின் காலை பிடித்துக் கொண்டு அவரை போகவிடாமல் கெஞ்சினர். இப்படி ஒரு காட்சி அரசுப் பள்ளி மட்டுமே சாத்தியம். பகவானின் இடமாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மாணவர்களுடன் இணைந்து பெற்றோர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பிரபலங்களையும் கலங்க வைத்த ஆசிரியர் பகவான்!
உள்ளூர் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் இந்த காட்சிகள் வெளியாகின. பார்ப்பவர்களுக்கும் கண்ணீர் வர வைத்த இந்த சம்பவம் தேசிய அளவில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. கண்ணீர் போராட்டத்தின் வெற்றியாக பகவானின் இடமாற்றமும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் பகவான் மற்றும் மாணவர்கள் பற்றி இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானும், பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷனும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு மழையை பொழிந்துள்ளனர். ஹிர்த்திக் ரோஷன் ஆசிரியர் பகவான் குறித்து வந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு “ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் உள்ள இந்த பாசப்பிணைப்பு, இந்த நிகழ்வு என் நெஞ்சை உருக்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் குரு சிஷ்யர்கள் என்று பெயரிட்டு ஆசிரியர் பகவான் செய்தியை ஷேர் செய்து வாழ்த்தியுள்ளார்.
ஆசிரியர் மாணவர் நெகிழ வைத்த உறவு!