A village goes dark for 35 days to save the hatchlings of an Indian Robbin : ”முல்லைக் கொடிக்கு தேர் தந்தான் பாரி” என்று கடையேழு வள்ளல்களின் கதை கேட்டு வளர்ந்திருக்கின்றோம் நாம். நம்மிடமும் மனிதம் இன்னும் மரணிக்காமல் இருக்க இந்த கதைகளும் ஒரு காரணமாக தான் இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம், அருகே அமைந்திருக்கும் பொத்தகுடி கிராம மக்களும் பாரிகளை போல செயல்பட்டுள்ளனர். இந்த பகுதியில் 35க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைந்துள்ளன
மேலும் படிக்க : ஆலமரத்திற்கு பிறந்த நாள் கொண்டாடிய மதுரை மக்கள்... கண்ணு வேர்க்குது மக்கா!
அனைத்தையும் ஒரே நேரத்தில் எரிய வைப்பதற்கான மெயின் ஸ்விட்ச் போர்ட் கறுப்புராஜா என்ற கல்லூரி மாணவர் ஒருவரின் வீட்டில் உள்ளது. 40 நாட்களுக்கு முன்பு தெருவிளக்குகளை போடுவதற்காக ஸ்விட்ச் போர்ட் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கே சிட்டுக்குருவி ஒன்று அட்டைப் பெட்டியில் சிறு சிறு வைக்கோல் புற்களை சேர்க்க துவங்கியிருந்தது. உள்ளே எட்டி பார்க்கும் போது மூன்று சிறு முட்டைகள் இருந்தது. தற்போது ஸ்விட்ச் ஆன் செய்தால் பறவை பயந்துவிடுமோ என்று எண்ணி தெருவிளக்குகளை ஆன் செய்யாமல் இருந்தார் கறுப்புராஜா.
மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று உணர்ந்த அவர் தன்னுடைய கிராம இளைஞர்கள் அனைவரையும் வாட்ஸ்ஆப் க்ரூப் ஒன்றில் இணைத்து தன்னுடைய கருத்தையும் எடுக்க இருக்கும் முடிவுகள் குறித்தும் கேட்டு அறிந்தார். அந்த பகுதியில் தற்போது தெருவிளக்குகள் எரிந்து ஒரு மாதத்திற்கும் மேலாக உள்ளது. ஆனாலும் கூட இந்த கூட்டை கலைக்காமல், அங்கிருக்கும் சிறு உயிர்களை தொல்லை செய்யாமல் இருக்க வேண்டும் என்று உணர்ந்த அவர்களின் நல்ல மனதை பலரும் போற்றி வருகின்றனர். தற்போது மூன்று முட்டைகளிலும் இருந்து சிட்டுக்குருவி குஞ்சுகள் வெளியே வந்துவிட்டன. அவை பறக்க கற்றுக் கொள்ளும் வரை இந்த நிலை தொடர்ந்தாலும் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள் தான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil