aavin new products : கொரோனாவை விரட்டும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க மோர்,சாக்கோ மற்றும் மேங்கோ லஸ்சி உள்ளிட்ட 5 புதிய ஆவின் தயாரிப்புகள் சந்தையில் களமிறங்கியுள்ளன. ஆவினின் இந்த தயாரிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.
நேற்றைய தினம், தலைமை செயலகத்தில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ஆவின் மோர், சாக்கோ லெஸ்ஸி, மேங்கோ லெஸ்ஸி, நீண்ட நாட்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின் டீ மேட் பால் ஆகிய ஐந்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆவின் மோர், கரோனா வைரஸ் தொற்று காலத்தில் மக்களுக்கு பயன்படும் வகையில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு,சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தி மிக்கபொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மோர் 200 மி.லி. பாட்டில் ரூ.15-க்கு விற்கப்படும்.
ஆவின் நிறுவனம் சாதாரண லெஸ்ஸி மற்றும் புரோ பையோடிக் என்ற இரண்டு வகை லெஸ்ஸிகளை விற்பனை செய்து வருகிறது. மேலும், சாக்லெட் சுவைமிகுந்த சாக்கோ லெஸ்ஸி மற்றும் மாம்பழச் சுவையுடன் கூடிய மேங்கோ லெஸ்ஸி என்ற இரண்டு புதிய லெஸ்ஸிகளை 200 மில்லி லிட்டர் பாட்டிலில் 23 ரூபாய் என்ற விலையில் தற்போது அறிமுகப்படுத்துகிறது.
90 நாட்கள் வரை கெடாத வண்ணம் தயாரிக்கப்படுகிறது. இந்த பால் 4.5 சதவீதம் கொழுப்பு சத்து மற்றும் 8.5 சதவீதம் புரதச்சத்தும் கொண்டது. 500 மில்லி லிட்டர் பாக்கெட் 30 ரூபாய் என்ற விலையில் இந்தப் பால் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நிஜ சிறுத்தை இவர்தான்யா! கொரோனாவை வென்ற 62 வயது கண்ணாயிரம்
ஆவின் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் பால் விற்பனையில் தமிழகத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil