கருணாநிதி மறைவு: மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார் நடிகர் கார்த்தி

Actor Karthi pays respect to karunanidhi : கருணாநிதி சமாதிக்கு சென்று நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார்

Actor Karthi pays respect to Karunanidhi : திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து துக்கம் அனுசரித்தார் நடிகர் கார்த்தி. மெரினாவில் அமைந்துள்ள சமாதிக்கு சென்று மனம் உருக அஞ்சலி செலுத்தினார்.

Actor Karthi pays respect to Karunanidhi : கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி:

உடல்நலக் குறைவால் மரணமடைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரை பகுதியில் சமாதி அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளையும் வென்று மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டது. ராஜாஜி அரங்கத்திற்கு வர இயலாத பிரபலங்கள் மெரினாவில் உள்ள சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். இன்று மதியம் நடிகர் கார்த்தி, கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது இல்லத்திற்கு சென்று ஸ்டாலினை சந்தித்து நேரில் துக்கம் அனுசரித்தார்.

Actor Karthi

ஸ்டாலினை நேரில் சந்தித்தார் நடிகர் கார்த்தி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பெரியார் சொன்னவற்றை எல்லாம் ஆட்சியை அமைத்து செய்து காட்டியவர் கலைஞர் கருணாநிதி. சிறிய கிராமங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் நினைவிடத்துக்கு வந்து கொண்டே இருப்பது அவரது சாதனையை காட்டுகிறது. இங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் இவரால் பலன் அடைந்திருப்பவராக இருப்பார்கள். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல சமூக சீர்திருத்தங்களை செய்தவர் அவர். கலைஞரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.” என்றார்.

நேற்று மதியம் நடிகை திரிஷா மெரினா கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.

மறைந்த கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் திரிஷா

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close