மறைந்த கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் திரிஷா

Actress Trisha at Karunanidhi Memorial : மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் நடிகை திரிஷா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Actress Trisha at Karunanidhi Memorial : கருணாநிதி சமாதிக்கு வந்த நடிகை திரிஷா

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி காலமானார். அவரது உடல் நேற்று அரசு மரியாதையோடு 21 குண்டுகள் முழங்க அண்ணா சமாதிக்கு அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவுக்கு பின்னர் அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

மறைந்த கருணாநிதி சமாதியில் அழுதுகொண்டே பாலூற்றிய வைரமுத்து

நேற்று சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு சினிமா துறையை சார்ந்த பலரும் நேரில் வந்து கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினர். ஆனால் பணியின் காரணமாக நேற்று ராஜாஜி அரங்கிற்கு வர இயலாததால் நடிகை திரிஷா இன்று மெரினா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

Actress Trisha at Karunanidhi Memorial :

கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய திரிஷா

இன்று மதியம் தனது தாயுடன் வந்த திரிஷா, கலைஞர் சமாதியில் மலர் தூவி, மண்டியிட்டு வணங்கினார். பின்னர் கருணாநிதியின் சமாதியை ஒரு முறை வலம் வந்து அஞ்சலி செலுத்தினார்.

Actress Trisha at Karunanidhi Memorial

மறைந்த கருணாநிதியை வணங்கினார் திரிஷா

பிறகு செய்தியாளரை சந்தித்த அவர், “கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், என பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞர் அவர் புகழாரம் சூட்டினார். கருணாநிதியை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close