Actor Rajinikanth talks about Thiruvalluvar issue : ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று இயக்குநர் கே. பாலச்சந்தரின் சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினி, நடிகர் கமல், இயக்குநர் மணிரத்தினம், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட முக்கிய திரையுலகத்தினர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். கமல் ஹாசனும் ரஜினி காந்தும் கலந்து கொண்டதால் இந்த விழா அரசியல் - கலை என பல பாதைகளில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினி காந்த்க்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளார் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டதை மேற்கொண்டு பேசிய கமல் ஹாசன் “காலம் தாழ்த்தி விருதுகள் தரப்பட்டாலும் தகுதியானவர்களுக்கே விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன” என்று கூறினார். கமல் குறித்து நடிகர் ரஜினி பேசுகையில் “அரசியல் நோக்கி கமல் ஹாசன் பயணித்தாலும் கலையை அவர் ஒரு போதும் கைவிட மாட்டார்” என்று கூறினார். கற்கண்டு கட்டிகள் மோதிக்கொண்டால் சர்க்கரை தான் உதிரும் என இந்த சிறப்பு சந்திப்பு குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டினார்.
பாஜக சாயம் பூச முயற்சி செய்கின்றனர் - ரஜினி காந்த்
அந்த நிகழ்வு முடித்து திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் திருவள்ளுவர் சிலை மீது நடத்தப்பட்ட மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது “திருவள்ளுவர் ஒரு ஆத்திகர். நாத்திகர் கிடையாது. அதை யாரும் மறுக்கவும் இயலாது. பாஜக அலுவலகத்தில் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர்கள் திருவள்ளுவருக்கு காவி நிறம் பூசியுள்ளனர். அதற்காக அனைத்து திருவள்ளுவர் சிலைக்கும் காவி நிறம் பூசவோ, பட்டை அணிவிக்கவோ வேண்டியதில்லை. மக்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எத்தனையோ இருக்க திருவள்ளுவருக்கு காவி தேவையற்றது” என்று கூறினார். வாழ்நாள் சாதனையாளர் விருது குறித்து கேள்வி எழுப்பிய போது, விருது அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் அவர்.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றம் போட்டியிடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்த அவரிடம் பொன். ராதாகிருஷ்ணனின் தொடர் கருத்துகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது எனக்கும் தொடர்ந்து பாஜகவின் வண்ணம் பூச முயற்சி செய்கிறார்கள். திருவள்ளுவர் எப்படி மாட்ட மாட்டாரோ அப்படியே நானும் மாட்டமாட்டேன் என்று அவர் அறிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.