/tamil-ie/media/media_files/uploads/2020/04/13147492_1015266768555815_8082283556565562484_o.jpg)
Actress Rohini Molleti IE Tamil FB live exclusive
Actress Rohini Molleti IE Tamil FB live exclusive : நடிகை மற்றும் சமூக செயல்பாட்டாளரான ரோஹிணி இன்று நம்முடன் முகநூல் நேரலையில் கலந்து கொள்ள உள்ளார். ரோகிணியை திரைப்பட நடிகை என்ற வட்டத்துக்குள் சுருக்கி விட முடியாது. டப்பிங் ஆர்டிஸ்ட், இயக்குநர், பாடலாசிரியர், நடன இயக்குநர், எழுத்தாளர், திரைக்கதை எழுத்தாளர் என பட்டியல் நீளும். பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனி இடம் பிடித்துள்ளார் ரோகிணி.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் துணை தலைவராகவும் உள்ளார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிரை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு எதிராக, போராட்டங்கள், விழிப்புணர்வு பேரணிகளை முன்னின்று நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டப்பிங் ஆர்டிஸ்ட்டாக இருவர், குரு, ராவணன் ஆகிய படங்களில் ஒலித்த ஐஸ்வர்யா ராயின் குரல் இவருடையது தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
மேலும் படிக்க : சீனு ராமசாமி ஐ.இ. நேரலை : நேயர்களுடன் கலகல உரையாடல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.