மகளிர் உரிமைத் தொகை வழங்க ஆயிரத்தெட்டு கண்டிசன் போட்டிருப்பதால், யாருக்கும் 1000 ரூபாய் கிடைக்காது என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க மாநாடு ஏற்பாடுகளுக்கான கூட்டத்தில் கலந்துக் கொண்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வளர்மதி, மகளிர் உரிமைத் தொகை யாருக்கும் கிடைக்காது என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: பள்ளி கல்வித் துறைக்கு ரூ500 அபராதம்; ஐகோர்ட் அதிரடி
முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறுகையில், தி.மு.க மகளிருக்கு 1000 ரூபாய் தருவதாக சொல்லியுள்ளது. ஆனால் நான் அடித்துச் சொல்கிறேன். தி.மு.க ஆட்சியில் யாருக்கும் 1000 ரூபாய் கிடைக்காது. ஏன்னா ஆயிரத்தெட்டு கண்டிசன் போட்டுருக்காங்க. ரேசன் கார்டு, ஆதார் கார்டு, பேங்க் பாஸ் புக் வச்சு இருக்கணும் என கண்டிசன் போட்டுருக்காங்க. கொடுக்கப்போறது 1000 ரூபாய். பேங்க்ல அக்கவுண்ட் ஓபன் பண்ணா 1000 ரூபாய் வேணும். அந்த 1000 ரூபாய் இருந்தா நாங்க ஏன் அங்க வரப்போறோம்.
இதையெல்லாம் தாண்டி போன் எடுத்துட்டு போகணுமா. அங்க ரேகை வச்ச ஒடனே ஓ.டி.பி வருமாம். ஓ.டி.பி.,னா என்னனு யாருக்காவது தெரியுமா? எனக்கே தெரியாது. இதெல்லாம் எப்ப நடக்கும். அப்புறம் சொந்த வீடு வச்சிருக்க கூடாதாம். எல்லாம் 3 செண்ட்ல வீடு கட்டி இருப்பாங்க. சொந்த வீடு வச்சுருக்கவங்களுக்கு கிடையாதாம். அதனால் இந்த 1000 ரூபாய் யாருக்கும் கிடைக்காது. யாராவது 4 பேருக்கு கொடுக்குற மாதிரி போட்டோ மட்டும் எடுத்துவாங்க. இவ்வாறு முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil