ஆளும் அதிமுக திங்கள்கிழமை சென்னையில் புதிய மாவட்டங்களைப் பிரித்து அதற்கான பொறுப்பாளர்களை நியமித்தது.
முன்னதாக, ஐந்து மாவட்ட யூனிட்கள் இருந்தன. இப்போது அதன் எண்ணிக்கை எட்டு வரை உயர்ந்துள்ளது. புதிய யூனிட்களில் வட சென்னை (தெற்கு) மற்றும் தென் சென்னை (வடக்கு மற்றும் தெற்கு) ஆகியவைகள் பிரிக்கப்பட்டுள்ளன., ஒவ்வொரு மாவட்ட செயலாளரும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களாக இருப்பார்கள்.
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்த திண்டுக்கல், தென்காசி
அதன்படி, வடசென்னை தெற்கு (கிழக்கு) - மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வடசென்னை தெற்கு (மேற்கு) - நா.பாலகங்கா, தென் சென்னை வடக்கு (கிழக்கு) - ஆதிராஜாராம், தென் சென்னை வடக்கு (மேற்கு) -பி.சத்யா, தென் சென்னை தெற்கு(கிழக்கு) எம்.கே. அசோக், தென் சென்னை தெற்கு (மேற்கு)- விருகை ரவி ஆகியோரை நியமனம் செய்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமை உத்தரவிட்டுள்ளது.
திரு. ஜெயக்குமார் 2000 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் பிரிக்கப்படாத வடசென்னை பிரிவுக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். 2001 மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அந்தப் பகுதிகளில் அதிமுக சிறப்பாக செயல்பட்டது. நவம்பர் 1994-ல் தென் சென்னை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட திரு. ஆதி ராஜாராம், வழக்கறிஞர் கே.எம்.விஜயன் மீதான தாக்குதல் வழக்கில் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டு, சர்ச்சைக்குரிய நபராக மாறினார்.
1996 அக்டோபரில் ஒரு விசாரணை நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார். இதனை ஆகஸ்ட் 2012-ல் சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. 2006 சட்டமன்றத் தேர்தலின் போது, அவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியடைந்தார்.
சீனு ராமசாமிக்கு என்ன ஆச்சு? பதறவைத்த ட்வீட்
2001-06 ஆம் ஆண்டில் மத்திய சென்னை மாவட்ட செயலாளராக இருந்த திரு.பாலகங்கா, 2011-ல் வடசென்னை (தெற்கு) மாவட்ட செயலாளரானார். ஒரு காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (மாநிலங்களவை), தமிழக வீட்டுவசதி வாரியத்தின் தலைவராகவும் இருந்தார்.
புதிய மாவட்ட செயலாளர்களின் விபரம்
வடசென்னை தெற்கு (கிழக்கு)- (மாவட்ட கழக செயலாளர்) திரு. D.ஜெயக்குமார்
1. ராயபுரம்
2. திரு.வி.க.நகர் (தனி)
வடசென்னை தெற்கு(மேற்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு. நா.பாலகங்கா
1. எழும்பூர் (தனி)
2. துறைமுகம்
தென் சென்னை வடக்கு(கிழக்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.ஆதிராஜாராம்
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி
2. ஆயிரம் விளக்கு
தென் சென்னை வடக்கு(மேற்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.தி-நகர் B. சத்தியா, MLA
1. தியாகராய நகர்
2. அண்ணாநகர்
தென் சென்னை தெற்கு (கிழக்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு. M.K.அசோக் Ex.MLA
1. மைலாப்பூர்
2. வேளச்சேரி
தென் சென்னை தெற்கு (மேற்கு) (மாவட்ட கழக செயலாளர்) திரு.விருகை V.N. ரவி, MLA
1.விருகம்பாக்கம்
2.சைதாப்பேட்டை
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”