Ambedkar statue damaged in Vedaranyam : நாகை மாவட்டம், வேதாரண்யம் காவல்நிலையத்திற்கு எதிரே நேற்று ஒரு சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. ஜீப்பை ஓட்டி வந்த பாண்டியன் என்பவர் ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்த ராம்ச்சந்திரன் என்பவர் மீது மோதிவிட்டதாக தெரிய வருகிறது. இதில் காயம் அடைந்த 24 வயதுமிக்க ராமச்சந்திரன் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்நிலையத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த ஜீப்பினை ராமகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர்கள் தீயிட்டு கொளுத்தினர். தீயினை அணைக்க முயன்ற தீயணைப்புத் துறையினரை அவர்களின் பணியை செய்யவிடாமல் தடுத்தும் உள்ளனர். இதனால் அப்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் அதிகமானது.
வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் அப்பகுதியில் வந்த வாகனங்கள், அரசு பேருந்துகள் அனைத்தையும் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். வேதாரண்யம் அரசு மருத்துவமனையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டன. மேலும் காவல்நிலையத்துக்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் காவலர்கள் சிலரும் காயம் அடைந்துள்ளனர். சற்று நேரத்தில் கலவர பூமியாக மாறிய அப்பகுதியில், காவல் நிலையத்துக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த டாக்டர். அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க : அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு: போராட்டத்தில் திராவிடர் கழகம்!
Ambedkar statue damaged in Vedaranyam : தலைவர்கள் கண்டனம்
இதனை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வண்டிப்பேட்டை, வெளிப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கும் நாகை - நாகூர் நெடுஞ்சாலையில், அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்பேத்கர் சிலை உடைப்பிற்கு பலதரப்பட்ட அமைப்பினர் தங்களின் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். சேதாரத்திற்கு உள்ளான அம்பேத்கர் சிலை நீக்கப்பட்டு புதிய வெண்கல சிலை அங்கே காவல்துறையினர் பாதுகாப்புடன் அரசு சார்பில் நிறுவப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/Ambedkar.jpg)
அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வேண்டும் - தொல்.திருமாவளவன்
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது குறித்து வருத்தம் தெரிவித்த தொல்.திருமாவளவன், சிலையை உடைத்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். சாதிய பயங்கரவாதத்தால் தமிழகம் வேட்டைக்காடாக மாறிவிடக்கூடாது எனவே இதற்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் கொளை வழிகாட்டிகளில் அம்பேத்கர் ஒருவர் என பாமக நிறுவர் டாக்டர் ராமதாஸ் ட்வீட் வெளியிட்டு தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
எம்.பி. ரவிக்குமார்
புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை உடைத்து தரைமட்டமாக்கிய சாதிய பயங்கரவாதிகளை குண்டர் சட்டத்தில் கைது செயய் வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.