/tamil-ie/media/media_files/uploads/2019/09/Untitled-1.jpg)
Motor Insurance Act 2019 Vehicle Insurance Premiums Rates, Penalties
Amended Motor Vehicle Act 2 wheeler fined Rs 16000 : திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல்துறையினர் மிகவும் ஸ்ட்ரிக்டாக வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர். ஹெல்மெட் அணிதல், சீட்பெல்ட் அணிதல், மிதமான வேகத்தில் செல்லுதல், குடிக்காமல் வண்டி ஓட்டுதல் ஆகியவை வாகன ஓட்டிகளுக்கே நன்மை அளிக்கக் கூடியது. இந்த விதிமுறைகளை சரியாக ஃபாலோ செய்யக் கூறி ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் கூட பலரும் அதை சரியாக கடைபிடிப்பதில்லை.
ரூ. 16 ஆயிரம் அபராதம்
இதனால் சட்ட விதிமுறைகளும், அபராதமும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய, திருத்தப்பட்ட மோட்டர் வாகன சட்டம் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் துணை காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் அவரது குழு போக்குவரத்து கண்காணிப்புகளை மேற்பார்வையிட்டது. கால்ட்வெல் காலனியை சேர்ந்த சண்முகநாதன் (29) என்பவர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தார். அவரை அழைத்து விசாரணை செய்த காவல்துறையினர், அவர் குடித்திருப்பதை கண்டறிந்தனர். அவரிடம் முறையான ஓட்டுரிமம் இல்லை. இந்த மூன்று காரணங்களின் அடிப்படையில் புதிய மோட்டர் வாகன சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குடித்துவிட்டு வண்டி ஓட்டிய காரணத்திற்காக அவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. முறையான லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டியதற்காக ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தலைக்கவசம் அணியாமல் வண்டி ஓட்டியதற்காக அவருக்கு ரூ. 1000 அபராதமும் விதிக்கப்பட்டது.
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.