கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை! - தமிழிசை

நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க மாட்டார்

நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க மாட்டார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கவில்லை! - தமிழிசை

tamilnadu live updates : CAM bill to be introduced in Lok Sabha on Monday

திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்பட உள்ள நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க மாட்டார் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisment

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி இயற்கை எய்தினார். இந்த நிலையில், வரும் 30ம் தேதி அவருக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள  உள்ளனர். இதுகுறித்த பட்டியல் சமீபத்தில் வெளியானது. அதில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால், அமித் ஷாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பின்பும் அவர் வருவது சந்தேகம் என்றுதான் கூறப்பட்டது. அமித் ஷா வருவது குறித்து உறுதியாக தெரிவிக்க முடியாது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தலில் அமித் ஷா பங்கேற்கவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். அமித் ஷாவிற்கு பதிலாக பாஜக பிரதிநிதிகளாக கருணாநிதி நினைவேந்தலில் நிதின் கட்கரி, முரளிதரராவ் பங்கேற்கின்றனர் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisements

மேலும் படிக்க - கருணாநிதி இரங்கல் நிகழ்ச்சியில் அமித் ஷா: ஆதரவும், எதிர்ப்பும்!

Amit Shah M Karunanidhi Tamilisai Soundararajan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: