தினம் 7 லட்சம் மக்களின் பசியை போக்கும் அம்மா உணவகம் - விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு
Amma Canteen: சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் இந்த உணவு வகைகள் ஊரடங்கு நேரத்தில் பணத்தட்டுப்பாட்டால் சிரமப்படும் சாதாரண மக்களுக்கு கைகொடுத்து வருகிறது
Amma Canteen: சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் இந்த உணவு வகைகள் ஊரடங்கு நேரத்தில் பணத்தட்டுப்பாட்டால் சிரமப்படும் சாதாரண மக்களுக்கு கைகொடுத்து வருகிறது
Amma Canteen in Tamil Nadu: தமிழகத்தில் சென்னை மாநகரில் 407 அம்மா உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 உணவகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5க்கும் விற்கப்படுகிறது.
Advertisment
இதைபோல் மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் இந்த உணவு வகைகள் ஊரடங்கு நேரத்தில் பணத்தட்டுப்பாட்டால் சிரமப்படும் சாதாரண மக்களுக்கு கைகொடுத்து வருகிறது.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.
இதனை கண்டித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை வைத்து அரசியல் செய்யாமல் அரசே இலவச உணவு வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்தது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு முடியும் வரை உணவு இலவசமாக வழங்கப்படும்.
கொரோனா எதிரொலியாக வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு உதவும் வகையில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுமக்களின் இடம், பெயர், தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு இலவச உணவு தர உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களில் அம்மா உணவகங்களில் விற்பனை 2 மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 7 லட்சம் பேர் வரை சாப்பிடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 கோடி முதல் கட்டமாக வழங்கினார் லாரன்ஸ். பிறகு தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கினார். நடிகர் சங்கத்துக்கு ரூ.25 லட்சமும் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு ரூ.15 லட்சமும் அளித்தார். தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அவர் ரூ.50 லட்சம் வழங்கி இருந்தார்.
அந்த தொகையில், இப்போது ஐம்பது அம்மா உணவகங்களில் 15 நாட்களுக்கு இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் விருகம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்பட மேலும் சில பகுதிகளில் 50 உணவகங்களில் இதுபோல் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுளளது. இந்த உதவிக்காக லாரன்சுக்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“