தமிழகத்தில் சென்னை மாநகரில் 407 உணவகங்களும் மற்ற மாநகராட்சி பகுதிகளில் 247 உணவகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் காலையில் இட்லி ரூ.1-க்கும், பொங்கல் ரூ.5-க்கும் விற்கப்படுகிறது.
Advertisment
இதைபோல் மதியம் சாம்பார் சாதம், தயிர் சாதம், மல்லி சாதம் போன்ற சாத வகைகளும் மாலையில் சப்பாத்தியும் விற்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் விற்கப்படும் இந்த உணவு வகைகள் ஊரடங்கு நேரத்தில் பணத்தட்டுப்பாட்டால் சிரமப்படும் சாதாரண மக்களுக்கு கைகொடுத்து வருகிறது.