COVID-19 For Journalists in Chennai: சென்னையில் மேலும் நான்கு பத்திரிகையாளர்களுக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் மூன்று பேர் ஒரே தமிழ் தொலைக்காட்சி செய்தி சேனலில் வேலை செய்கிறார்கள், நான்காவது நபர் மற்றொரு சேனலில் பணிபுரிபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி செய்தி சேனலின் 26 ஊழியர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளான நிலையில், மேலும் நான்கு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
விஜய்க்கு நன்றி கூறிய முதல்வர் ; மற்ற நடிகர்களும் உதவ முன் வர வேண்டும் என வேண்டுகோள்
கடந்த இரண்டு நாட்களில் ஒரு தமிழ் செய்தித்தாள் நிருபருக்கும் ஒரு தொலைக்காட்சி சேனல் பத்திரிகையாளருக்கும் கொரானா தொற்று உறுதியான நிலையில், சென்னை முழுவதும் பல பத்திரிகையாளர்கள் தாமாக சோதனைக்கு முன்வந்தனர்.
இரண்டு நாட்களில் ஓமந்தூரார் பிரத்யேக COVID-19 நோய் சிகிச்சை மருத்துவமனையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
“மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட மொத்த 400 மாதிரிகளில் (பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் உட்பட) ஐந்து முடிவுகள் பாஸிட்டிவாக வந்துள்ளன. அவற்றில் நான்கு ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்ட தொற்று” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பத்திரிகையாளர்களும் ஓமந்தூரார் கோவிட் -19 சிகிச்சைக்காக பிரத்யேக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதல்வர் பேச்சுவார்த்தை: சென்னையில் அரசு மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்
சென்னையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் தொற்று பரவுவது குறித்து, சுகாதார அதிகாரிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
இதன் மூலம், சென்னையில் மொத்தம் 32 பத்திரிகையாளர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி சென்னையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil