விஜய்க்கு நன்றி கூறிய முதல்வர் ; மற்ற நடிகர்களும் உதவ முன் வர வேண்டும் என வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக 22/04/2020 அன்று ரூ.1.30 கோடியை நிதியாக கொடுத்தார் நடிகர் விஜய்.

By: Updated: April 23, 2020, 09:24:25 AM

puducherry cm Narayanasamy thanked Actor Vijay for his corona prevention donation : கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக ரூ.1.30 கோடியை நடிகர் விஜய் நிதி உதவியாக அளித்துள்ளார். தமிழக முதல்வர் நிவாரண நிதிக்காக ரூ. 50 லட்சமும், பிரதமர் நிவாரண நிதியில் ரூ. 25 லட்சமும், தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்திற்கு ரூ.25 லட்சமும், கேரளாவிற்கு ரூ. 10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுவை மாநிலங்களுக்கு தலா ரூ. 5 லட்சமும் வழங்கினார். மேலும் தன்னுடைய ரசிகர்கள், மாவட்ட நிர்வாகிகளின் வழிமுறைகள் படி கொரோனா தடுப்பு பணியில் தங்களை ஈடுபடித்திக் கொள்ளும்படியும் அவர் கேட்டுள்ளார்.

மேலும் படிக்க : கடமை முக்கியம் : தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்காத யோகி; தாய்க்கு மன்னிப்பு கடிதம்

இவரின் இந்த உதவியை புதுவை மாநில முதல்வர் நாராயண சாமி வரவேற்றுள்ளார். நடிகர் விஜயின் உதவிக்கு நன்றி தெரிவித்து பேசிய அவர் இதர நடிகர்கள் மற்றும் நடிகைகள் கொரோனா தடுப்பு பணிக்கு நிதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும் படிக்க : அம்மா- மகள்னா இப்படி இருக்கணும்பா: சூப்பர் சிங்கரின் சுப்ரீம் டான்ஸ்

கொரோனா வைரஸால் இதுவரை புதுவையில் 8 பேர் பாதிப்படைந்துள்ளனர். அதில் 4 நபர்கள் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். மீதம் உள்ள நான்கு நபர்களில் மாஹியை சேர்ந்த 71 வயது மிக்க மூதாட்டி மரணமடைந்தார். இந்நிலையில் 3 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில முழுவதும் 2800 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Puducherry cm narayanasamy thanked actor vijay for his corona prevention donation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X