Advertisment

ஸ்லீப்பர் செல் என்று கூறி மக்களை எத்தனை நாட்களுக்கு ஏமாற்ற முடியும் ? டிடிவிக்கு தங்க தமிழ்ச்செல்வன் பதிலடி!

Thanga Tamilselvan Vs TTV Dhinakaran : கட்சிக்காக உழைத்திருக்கின்றேன். கருத்துகளுக்கு கவனம் அளிக்கப்படவில்லை என்றால் விமர்சனங்களை வைத்தான் செய்வேன் - தங்க தமிழ்ச்செல்வன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
AMMK Audio Leak and Clash

AMMK Audio Leak and Clash

AMMK Audio Leak and Clash : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன், தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு இரு தரப்பு கட்சியினரும் அமைதியை கடைபிடித்து வந்த நிலையில், தங்க தமிழ்ச்செல்வன், அமமுக நிர்வாகி ஒருவரிடம் அலைபேசியில் பேசிய உரையாடல்கள் வெளிவரத் துவங்கின.

Advertisment

அவர் அதில் அமமுகவையும், அமமுகவின் தலைவர் டிடிவி தினகரனையும் தரக்குறைவான வார்த்தைகளால் சாடினார். இது மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்ப, தேனி மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் ஆலோசித்து தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து விரைவில் நீக்கிவிடுவோம் என்று கூறினார் டிடிவி தினகரன். தமிழ்ச்செல்வன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு தன்னுடைய பதில்களை நேரடியாக பகிர்ந்து கொண்டார்.

&t=3s

 

மேலும் படிக்க : தமிழகத்தில் நடக்கும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள

உங்களை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு தங்க தமிழ்ச்செல்வனின் பதில் :

ஊடகங்கள் தான் என்னை பெரியாளாக்கியது. நான் உண்மையை பேசினேன். அதனை மக்கள் விரும்பினார்கள். அதனால் நான் மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்றேன். கட்சி வேலைகளை மட்டுமே கட்சியின் தலைவன் பார்க்க வேண்டும். வீடியோ வெளியிடுவது, ஆடியோ வெளியிடுவது

பாண்டிச்சேரி, கூர்க், கூவத்தூர், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், நெல்லை என அனைத்து இடத்திலும் அடைத்து வைக்கப்பட்டோம். தேர்தல் வேலைகள் பார்த்தோம். அது குறித்து அவர் ஒன்றுமே குறிப்பிடவில்லை. ஆனால் பொன்னாரை சந்தித்ததையும், பன்னீர் செல்வத்தை சந்தித்தையும் அவர் வெளியே பேசி வருகிறார்.

தீவிரவாத அமைப்பிற்கு தலைவாக இருக்க வேண்டியவர் கட்சிக்கு தலைவராக இருக்கிறார். ஸ்லீப்பர் செல் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். யாரும் என்னை பின்னால் இருந்து இயக்கவில்லை. ஏதோ, வேலுமணி, தங்கமணி என யாரோ என்னை இயக்குவதாக கூறுகின்றனர். அவர்களிடம் நான் பேசியது கூட இல்லை. அவர்கள் எப்படி என்னை இயக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த என்ன நடவடிக்கை ?

ஒரு நடவடிக்கையும் இல்லை. அமைதியாக இருப்பேன். நான் ஊடகத்தில் ஒரு நல்ல அரசியல் விமர்சகராக என்னுடைய கருத்தினை என்றும் சொல்வேன்.

அதிமுகவில் இணைவீர்களா ?

இல்லை. எனக்கு அப்படி இது வரையிலும் ஒரு எண்ணமும் உருவாகவில்லை. சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறுதலான பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

18 எம்.எல்.ஏக்கள் குறித்து

18 எம்.எல்.ஏக்களும், டிடிவி தினகரனை நம்பி கட்சியில் இருந்து வெளியேறி தற்போது பதவியை இழந்து வாடி வருகிறனர், நான் சொல்லித்தான் அவர்கள் கவர்னரை சந்தார்கள் என்கிறார். கட்சியின் தலைமை அவர் இருக்க என் பேச்சை கேட்டுக் கொண்டு எப்படி கவர்னரை சந்திப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார் தங்க தமிழ்ச்செல்வன்.

மேலும் படிக்க : ‘தங்க தமிழ்ச் செல்வனை விஸ்வரூபம் எடுக்கச் சொல்லுங்க பார்ப்போம்; கட்சியில் இருந்து அவர் நீக்கப்படுவார்’ – டிடிவி தினகரன் பதிலடி

ஏன் இந்த கடுமையான விமர்சனங்கள் ?

நான் கட்சிக்காக உழைத்திருக்கின்றேன். கருத்துகளை கேட்கவில்லை என்றால், விமர்சனங்களை வைக்கத்தான் செய்வோம். கட்சியின் தலைமை என்றால் விமர்சனங்களை தாங்கித்தான் ஆக வேண்டும். ஐபெரும் தலைவர்களில் ஒருவராகவே இருந்தார் அறிஞர் அண்ணா. ஆனால் இவரோ தனித் தலைவராக தன்னை முன்னிறுத்த முயல்கிறார்.

ஸ்லீப்பர் செல் என்று கூறி இதுவரை சாதித்தது என்ன?

அண்ணா திமுகவையும் மீட்கவில்லை, இரட்டை இலையை மீட்கவும் இல்லை. 18 எம்.எல்.ஏக்கள் வழக்கிலும் தோல்வி. இறுதியாக தேர்தலிலும் தோல்வி. ஸ்லீப்பர் செல் ஸ்லீப்பர் செல் என்று கூறி டிடிவி தினகரன் இதுவரை சாதித்தது என்ன? என்று தன் தரப்பு நியாயங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment