scorecardresearch

இளைஞர் அணி பதவிகளுக்கு அன்பகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு; இளைஞர் அணி பதவிகளுக்கு மட்டும் அன்பகத்தில் விண்ணப்பிக்க வலியுறுத்தல்

இளைஞர் அணி பதவிகளுக்கு அன்பகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்: அன்பில் மகேஷ்

திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டத்தில் சார்பு அணி நிர்வாகிகள் பதவிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

தி.மு.க தலைமைக்கழக ஆணைக்கிணங்க திருச்சி தெற்கு மாவட்டத்தில் சார்பு அணிகளான இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, விவசாய அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, பொறியாளர் அணி, விவசாய தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, இலக்கிய அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, ஆதிதிராவிடர் நல அணி, தொழிலாளர் அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, நெசவாளர் அணி, வர்த்தகர் அணி, மீனவர் அணி, மருத்துவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விளையாட்டு மேம்பாட்டு அணி, சுற்று சூழல் அணி, அமைப்பு சாரா தொழிலாளர் அணி, வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி போன்ற அணிகளுக்கு கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதையும் படியுங்கள்: தந்தையைப் போல நீண்ட காத்திருப்பு இல்லை: உதயநிதி இனி அமைச்சர்

இளைஞர் அணிக்கு விண்ணப்பிக்கும் கழகத் தோழர்கள் மட்டும் சென்னை அன்பகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

மற்ற மாவட்டம், மாநகரம், ஒன்றியம், நகரம், பேரூர், வார்டுகள் உள்ளிட்டவைகளில் தலைவர், துணைத்தலைவர், அமைப்பாளர்கள் பதவிகளுக்கு தலா ஒருவரும், துணை அமைப்பாளர்கள் 2 முதல் 5 பேர் வரையிலும் நியமிக்கப்படவுள்ளனர். வயது வரம்பின் காரணமாக தகவல் தொழில் நுட்ப அணிகளுக்கு மட்டும் மாவட்ட அளவில், தலைவர், துணை தலைவர், பதவிகள் உருவாக்கப்படவில்லை. அதேபோல மருத்துவர் அணி மாவட்டம் மற்றும் தொகுதி அளவில் மட்டும் நியமிக்கப்பட உள்ளது.

இளைஞர் அணிக்கு உச்ச வயது வரம்பு ஒன்றியம், பகுதி, நகரம், பேரூர்களுக்கு 35 வயது, மாவட்ட, மாநகரத்துக்கு 40 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கான விருப்ப மனு படிவத்தை பெற்று, அல்லது இணையவழியில் வண்ண நகல் எடுத்து அவற்றை பூர்த்தி செய்து மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் உள்ளிட்ட கட்சி அலுவலகங்களில் டிசம்பர் 14 முதல் 20 ஆம் தேதிக்குள் (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) ஒப்படைக்கலாம்.

மேற்கண்டவாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Anbil mahesh invites application from dmk cadres for party post in trichy south