anna university engineering counselling : கடந்த 22 ஆண்டுகளாக, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுகளை அண்ணா பல்கலைக்கழகம்தான் நடத்திவந்தது. கடந்த ஆண்டு கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற்றது. 2019-ம் ஆண்டுகளுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை, அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
இந்த முறை சான்றிதழ்கள் சரிபார்ப்பது தவிர்த்து, விண்ணப்பிப்பதில் தொடங்கி கலந்தாய்வு வரை அனைத்தும் ஆன்லைன் மூலமாக 10 படிநிலைகளில் நடைபெற்று வருகிறது. 13.06.2019 அன்று சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் முடிந்துவிட்டன.
சான்றிதழ் சரிபார்த்த பிறகு, தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. விண்ணப்பதாரர்கள் தகுதி மதிப்பெண்களின்படி பல குழுக்களாகப் பிரிக்கப்பட்டுக் கலந்தாய்வுச் சுற்றுகளில் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில்,தமிழ்நாடு இன்ஜினீயரிங் அட்மிஷன்ஸ்-2019) (டி.என்.இ.ஏ-2019 ) www.tneaonline.inஎன்ற பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்டு கவுன்சலிங் நடைப்பெற்று வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இன்ஜினீயரிங் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சலிங்கில் தீடீரென்று இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
read more.. TNPSC exam Notification 2019
பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று (8.7.19) காலை முதல் வரும் புதன்கிழமை மாலை வரை மாணவர்கள் இன்ஜினீயரிங் கவுன்சிலிங்கில் ஆன்லைன் வழியாக கல்லூரி மற்றும் மற்ற விபரங்களை பதிவிட்டு தெரிந்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், காலை முதலே இணையதளம் முடங்கியதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சில நாட்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழக்கழகத்தின் இணையதளத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் வசதிக்காக தரமற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.