Anna University exam scam : அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுதாள் திருத்தம் முறைகேட்டில், பதிவாளர் கணேசனுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்பு பதிவாளராக ஜெ. குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
Anna University exam scam : அண்ணா பல்கலைக்கழக தேர்வு முறைகேடு:
அண்ணா பல்கலைக்கழகத்தில், மறுமதிப்பீடு மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த முறைகேட்டிற்கு பதிவாளர் கணேசன் முக்கிய காரணம் எனவும் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பினரின் அனைவரும் தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினர்.
அண்ணா பல்கலைகழகம் ஊழலற்ற நிர்வாகம் என்று நிரூபிக்கப்படும் : துணை வேந்தர் சூரப்பா
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின் பதிவாளர் பதவியில் இருந்து கணேசனை நீக்கி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் கணேசனுக்கு பதிலாக புதிய பொறுப்பு பதிவாளராக, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத்துறை பேராசிரியர் ஜெ. குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள கணேசன் ஏற்கனவே ஓய்வு பெற்று அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.