annamalai | தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை (டிச.3) நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “அமலாக்கத் துறை அலுவலகத்தில் புகுந்த 35 பேரில் 4 பேர் மட்டுமே உரிய இடங்களில் கையெழுத்திட்டுள்ளனர்.
மீதமுள்ள 31 பேர் யார்? அவர்கள் உரிய ஆவணங்களில் கையெழுத்திட வில்லை.
இது குறித்து தமிழக டிஜிபி செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஏனெனில் அங்கு உரிய ஆவணங்கள், குறிப்புகள் இருந்தன” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, 3 மாநில தேர்தல் வெற்றி பேசிய அண்ணாமலை, “முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். இது 2024 மக்களவை தேர்தலுக்கான வெற்றி ஆகும்” என்றார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் த.இ. தாகூர்
இதையும் படிங்க வளர்ச்சி அரசியலுக்கு கிடைத்த வெற்றி: நரேந்திர மோடி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“